16
வரலாற்றுக்கு முன்
முப்பத்து மூவர் கடவுளர் இருந்தனர் என்றும், பதினொருவர் விண்ணிலும் பதினொருவர் மண்ணிலும், மற்றைப் பதினொருவர் நீரிலும் இருந்தனர் என்றும் வேதம் சொல்லுகின்றது[1]. இவர்களைப் பற்றிய விளக்கங்களெல்லாம் இங்கே நமக்குத் தேவையில்லை. இந்த இருக்கு, முன் கண்டபடி கி. மு. 2000க்கும் 1500க்கும் இடையில் தோன்றிக் காது வழியே கேட்கப்பெற்று, சுமார் 400 ஆண்டுகள் கழித்து எழுதி வைக்கப்பெற்றது. அதற்கு இடையில் இதில் உருத்திரனும், விஷ்ணுவும், பிற கடவுளரும் குறிக்கப் பெறுகின்றனர் என்றாலும் அவர்கள் முக்கியமாகப் போற்றப்படவில்லை. விஷ்ணு ஒரு பணியாளராகவே (worker) காட்டப்படுகின்றனர்[2]. உருத்திரனும் ஒரு குறையாகவே காட்டப்படுகின்றான். மங்கலமாகக் காணும் சிவனும் திருமாலும் சக்தியும் அவர்களுக்கு விளங்காதவர்களே. மற்றும் எங்கும் நிறைந்த பரம்பொருள் என்ற கடவுள் உணர்வு அவர்களுக்குத் தெரியாது[3]. பின்னால் சில நூற்றாண்டுகள் கழித்துக் கங்கைச் சமவெளியில் உருவாகிய அதர்வண வேதத்திலேதான் அந்தக் குறிப்பு ஓரளவு காட்டப்படுகின்றது[4]. அதிதி, ஆதித்தர், பிரகஸ்பதி போன்ற தெய்வங்கள் உள்ளன. அக்காலத்தில் அவர்கள் தங்களுக்கு முன் வாழ்ந்த பரந்த இந்திய நாட்டு மக்களோடு போரிட்டதோடு, அவர்களுக்குள்ளேயே ஒரு குழுவுக்கும் மற்றொரு குழுவுக்கும் போராட்டம் இருந்திருக்கிறது. அவர்கள் பாடல்கள் பெரும்பாலும் வெற்றிப் பாடல்களாய் இருப்பதால், அவர்கள் சென்ற இடமெல்லாம் வெற்றி பெற்றார்கள் எனக் கொள்ள இடமுண்டு. அவர்கள் கங்கைவெளிக்கு வருமுன்பும் வந்த பின்புமேதான், அப்பகுதிகளில்