பக்கம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வடக்கும் தெற்கும்

19



மத்திய தரைக்கடல் மக்களின் வாழ்வுக்கும் திராவிட மக்களின் வாழ்வுக்கும் பல தொடர்புகள் உள்ளன என்பதை மேலே கண்டோம். எனவே, திராவிடர்களும் ஆரியர்களைப் போன்று அங்கே இருந்து ஆரியருக்கு முன் உள்ளே புகுந்து வடவிந்தியப் பகுதிகளையெல்லாம் உரிமையாக்கிப் பின் மெள்ள மெள்ளத் தெற்கேயும் வந்து தங்கினார்களோ என்று காட்டும் ஆராய்ச்சி உண்மை எனக் கொள்ள வேண்டிய ஒன்று போலும்!

ஆரியர் இந்தியாவிற்கு வந்தபோது சிறந்த மக்களினத்தார் அவரினும் மேம்பட்டவராய் உயர்ந்த நாகரிகமும் பண்பாடும் நிறைந்தவராய் வாழ்ந்தனர் என்பதை வரலாற்று உலகம் கொண்டுள்ளது. அந்த இனத்தவரையே பலரும் திராவிட இனத்தவர் என்பர். அவ்வாறு கூற விரும்பாத சிலர் 'ஆரியருக்கு முற்பட்டவர்’ என அவர்களை வழங்குவர். அப்படியாயின், அவர்கள் பெயரற்றவர்களாகவா வாழ்ந்தார்கள்? இல்லை. எனவே, அன்று பரந்த பாரதம் முழுவதிலும் இருந்தவர்களைத் திராவிடர் எனக் கொள்வதில் தவறு இல்லை. இந்த உண்மையை S. K. சட்டர்ஜி அவர்கள் நன்கு காட்டுகின்றனர்; ஆரியர் இந்தியாவிற்கு வருமுன் மத்திய தரைக்கடற் பகுதியிலிருந்து கிழக்கு நோக்கி வந்து, இந்தியா முழுதும் பரவிக் கோட்டைகளையும் நகரங்களையும் உண்டாக்கி, இமயம் முதல் குமரி வரை வாழ்ந்தவர்கள் திராவிடர்களே என அறுதியிட்டுக் காட்டுகின்றார்[1]. இந்த உண்மை, மொழி அடிப்படையிலும் வேறு பல வகைகளிலும் நன்கு விளக்கப் பெறுகின்றது. திராவிட மொழியின் மொழிச் சிதறல்கள்கூறுகள்-வடமேற்கே பலுசிஸ்தானத்திலும் தென்கிழக்கிலே ஆசாமிலும், மத்திய சூடிய நாகபுரியிலும் உள்ளமை


  1. Race movements and Pre-Historic culture, by S.K. Chatterji (Prof. Calcutta University) Vedic Age, p. 154.