20
வரலாற்றுக்கு முன்
இந்த உண்மையை நன்கு வலியுறுத்துமன்றோ? இன்று தென்னாட்டிலுள்ள் திராவிடருடைய பழக்க வழக்கங்களும் பிற பண்பாட்டியல்புகளும் இன்றும் வட இந்தியாவில் பல பகுதிகளில் உள்ளமையும் இந்த உண்மையை நன்கு எடுத்துக் காட்டுவதாகும்[1]. A. D. புலாஸ்கர் என்பவரும், ஆரியர் வருமுன் இந்தியாவில் சிறந்த பல பேரரசுகளும், நாடுகளும், நகரங்களும், பண்பாடுகளும் மிக உயர்ந்த நிலையில் இருந்தன என்றும், அவை திராவிட அடிப்படையைச் சார்ந்தன எனக்கொள்ளல் தவறாகாது என்றும் எடுத்துக் காட்டுகின்றார்[2]. இந்த நாகரிகமும் பண்பாடும் பிற வழிபாடு, வாழ்க்கை, மொழி, கலை முதலியனவுமே சிந்துவெளி நாகரிகத்தால் நாம் அறிவனவாகும் எனவும், எனவே, சிந்துவெளி நாகரிகக் கால எல்லையாகிய கி. மு. 3000 ஆண்டில் திராவிடர் இந்தியா முழுவதும் இருந்தார்கள் எனக் கொள்வது பொருந்தும் எனவும் சட்டர்ஜி அவர்கள் குறிப்பதும் இங்கு எண்ணத்தக்க ஒன்றாகும்[3]. ஆரியர் இந்திய நாட்டிற்கு வந்தபோது திராவிடர்கள் நகர்களும் கோட்டைகளும் கட்டிக்கொண்டு வாழ்ந்தார்கள் என வரலாற்று ஆசிரியர் பிறரும் நன்கு விளக்குகின்றனர்[4]. இவர், திராவிடர்கள் இந்தியாவின் பழங்குடிகளே எனக் காட்டுவர்[5]. இவர்களுடைய திராவிடப் பண்பாடு இங்கிருந்தே பிற உலகப் பகுதிகளுக்கு-பலுசிஸ்தானம், மத்திய தரைக்கடல் பகுதி ஆகியவற்றிற்குச் சென்றிருக்கலாம் எனக் கூறுவார்கள். திராவிடர்களின் வட்டெழுத்து முறையும் செமிட்டிக் (Semitic) அடிப்படை