பக்கம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வடக்கும் தெற்கும்

21


யில் உண்டாயிற்று எனக் கூறுவர்; சிந்துவெளி மொழி, திராவிட மொழியை ஒத்ததே எனவும் காட்டுவர்[1]. திராவிடரே மிகப் பழைமையான நாகரிகம் வாய்ந்த இந்திய மக்கள் என்பதையும் எடுத்துக் காட்டுகின்றனர்[2]. திராவிடர்கள் ஆரியரினும் வேறுபட்ட நாகரிகம் உடையவர்களென்றும், உழவு அவர்களது முக்கியத்தொழிலாய் இருந்ததென்றும், நல்ல இலக்கியங்களை அவர்கள் பெற்றிருந்தார்கள் என்றும் குறிக்கின்றனர்[3].

வரலாற்றுக்கு முற்பட்ட இந்தியாவை ஆராய்ந்த பானர்ஜி அவர்கள், இவற்றையெல்லாம் நன்கு ஆராய்ந்து சில உண்மைகளை நிறுவியுள்ளனர். திராவிட மக்கள் இறந்தவரைத் தாழியில் புதைத்தார்கள் என்ற உண்மையைத் தமிழ் நாட்டுப் புதைபொருள்கள் இன்று நன்கு விளக்குகின்றன. இந்த முறையும் தாழிகள் அமைப்பும் பல நாடுகளில் தமிழ் நாட்டில் உள்ளவை போன்றே இருக்கின்றன எனக் காட்டியுள்ளார்[4]. மத்திய தரைக் கடல் நாடுகள், மெசபட்டோமியா, பாபிலோன், பிரஷ்யா, பலுசிஸ்தான், சிந்துவெளி ஆகிய பகுதிகளில் அவை அகழ்ந்தெடுக்கப்படுகின்றன எனக் காட்டியுள்ளனர். திராவிடர்களுக்குக் கொளுத்தும் பழக்கம் இல்லை என்றும், ஆரியரோடு கலந்த பிறகே அந்தப் பழக்கத்தை மேற்கொண்டார்கள் என்றும் காட்டியுள்ளனர். சிந்து, பலுசிஸ்தானம் ஆகிய நாடுகளில் கண்டெடுக்கப்பட்ட பழங்காலப் புதைபொருள்கள் அவை திராவிடர்களுடையன என்றும், அக்காலத்தில்


  1. History of India. p. 27.
  2. ibid p. 25.
  3. History of India, p. 26.
  4. Pre-Historic, Ancient and Hindu India, by Banerjl, p. 12.