உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

வரலாற்றுக்கு முன்


கூறியிருப்பார்கள். அவற்றையெல்லாம் எண்ணி எண்ணித் தலைவி மயங்கியிருப்பாள். பக்கத்தில் உள்ள தோழி அவளுக்குத் தேறுதல் சொல்லி ஆறியிருக்கச் செய்திருப்பாள். அதே வேளையில் தலைமகனும் அவளை வெளிப்படையாக மணந்துகொள்ள வரைவு மலிந்தான். இதை அறிந்தாள் தோழி; ஒடித் தலைவியிடம் தலைவன் வரைவு மலிந்தான் என்றும், வம்பு பேசிய ஊர்ப் பெண்டிர் வாயடங்கினர் என்றும் கூறினாள். அப்போது அவள் எடுத்துக்காட்டிய உவமையே நம்மை இராமாயணத்துக்கு அழைத்துச் செல்கின்றது. இராமன் இலங்கையின்மேல் படையெடுத்த காலத்தில் கடற்கரையில் வானர சேனைகளோடு இருந்து போர் பற்றி ஆலமரத்தின் கீழ் ஆராய்ந்தானாம். அப்போது அம்மரத்தில் இருந்த பறவைகள் கூச்சலிட்டனவாம். அதனால், கீழே இராமனது ஆய்வு தடைப்பட்டதாம். எனவே, அவன் அப்பறவைக் கூட்டத்தைக் கையமர்த்தி ஒலி அடங்கச் செய்தானாம். அவையும் ஒலி அடங்கின. அந்த அடக்கத்தைப் போன்று தலைவியைப் பழித்த ஊரில், ஒலி அடங்கிற்று என்பதே உவமை. இதைக் கம்பர்கூடக் காட்டவில்லை போலும்! சங்க காலத்தில் வாழ்ந்த மதுரைத் தமிழ்க் கூத்தனார் கடுவன் மள்ளனார் அழகுபட எடுத்துக் காட்டுகிறார். இதோ அவர் வாக்கு:

‘வென்வேற் கவுரியர் தொல்முது கோடி
முழங்கிரும் பெளவம் இரங்கும் முன்துறை
வெல்போர் இராமன் அருமறைக்கு அவித்த
பல்வீழ் ஆலம் போல
ஒலி அவிந் தன்றுஇவ் வழுங்கல் ஊரே.’ (அகம். 70)

இனி, புறநானூற்றில் இவ்விராமாயணம் பற்றிய மற்றொரு குறிப்பினைக் காணலாம். அதுவும் இராமாயணத்தில் பின்னர் காணப்படாத ஒன்றாகவே உள்ளது. “ஊன் பொதி பசுங்குடையார் உயர்ந்த புலவர்; மற்ற புலவர்களைப் போன்றே வறுமையால் வாடியவர். அவர் சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னியைக்