உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இரண்டையும் இணைத்த எழுத்துக்கள்

35


காணச் சென்றார்; கண்டார். அவன் பல பரிசுப் பொருள்களை வழங்கினான். அவற்றுள் பல அணிகளும் இருக்கக் கண்டார்கள் புலவரின் மனைவி மக்கள். அவர்கள் அதுவரை அணிகளைக் காணாதவர்கள் போலும்! எனினும், அவை அணியத்தக்கன என்பதை முன்னே பிறர் அணியக் கண்டு உணர்ந்திருப்பார்கள். எனவே, அவர்கள் அவற்றை எடுத்து அணிந்தார்கள். எனினும், அணியும் முறை தெரியவில்லை. கழுத்துக்கணிவதை இடுப்புக்கும், காதுக்கு அணிவதை மூக்குக்கும். கைக்கணிவதைக் காலுக்குமாக இவ்வாறு மாற்றி அணிந்துகொண்டார்கள். அதை எண்ணிப்பார்த்தார் புலவர் பசுங்குடையார். அவருடைய எண்ணத்தில் இராம காதை உருவாயிற்று. இராவணனால் தூக்கிச் செல்லப்பட்டபோது, சீதை தன் அணிகளை ஆடையின் நுனியில் முடிந்து கீழே விட, அவை கிட்கிந்தையில் விழ, அவற்றின் சிறப்பறியாக் குரங்குகள் மாறி மாறி அணிந்த காட்சி அவர் கண்முன் நிழலிட்டிருக்கும். இதையே உவமையாகக் கொண்டு தம் சுற்றத்தைக் காட்ட விரும்பினார் புலவர். பாட்டும் எழுந்தது :

"மேம்படு சிறப்பின் அருங்கல வெறுக்கை
தாங்காது பொழிதந் தோனே; அதுகண்டு
இலம்பாடு உழந்தஎன் இரும்பேர் ஒக்கல்
விரற்செறி மரபின செவித்தொடக் குநரும்
செவித்தொடர் மரபின விறற்செறிக் குநரும்
அரைக்கு அமை மரபின மிடற்றுயாக் குநரும்
மிடற்றுஅமை மரபின அரைக்குயாக் குநரும்,
கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை
வலித்தகை அரக்கன் வெளவிய ஞான்றை
கிலம்சேர் மதர்அணி கண்ட குரங்கின்
செம்முகப் பெருங்கிளை இழைப்பொலிங் தாஅங்கு
அறாஅ அருங்கை இனிதுபெற்றிகுமே.”
(புறம்.378)

என்பது அவர் வாக்கு. இக்கருத்தும் கம்பரது இராமாயணத்தில் காணப்படாத ஒன்று என்பது அறிந்தோர் கூற்று.