பக்கம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இரண்டையும் இணைத்த எழுத்துக்கள்

43


வளனையும் வளர்த்தார்கள் என்பதற்கு 'அரிசி' போன்ற சொல் ஆய்வுகளும், 'யவனர்’ என்னும் பெயர் பல இலக்கியங்களில் எடுத்தாளப் பெறுவதும் சிறந்த சான்றுகளாகும்.

அசோகர் தம் கல்வெட்டுக்கள் வழி ஆராய்ச்சி செய்த ஸ்மித்து (W. A. Smith) அவர்கள். அக்காலத்தில் ஆந்திர நாடு கிருஷ்ணை ஆற்றங்கரைக்கு வடக்கும் மேற்கும் பரந்து விரிந்து இருந்ததென்றும், அதுவரை சோழ நாட்டு எல்லை விரிந்து சிறந்து நின்றதென்றும் காட்டுகின்றார்[1]. மற்றும் ஆய்வாளர்கள் சேர, சோழ, பாண்டிய நாடுகள் சேர்ந்த தமிழ் நாடு அசோகர் காலத்தில் தனி உரிமை பெற்று அசோகருடன் சம நிலையில் வாழந்தது எனக் காட்டுகின்றனர். அசோகர் நாட்டுக்குத் தென்னெல்லைக் கோடு வரைகின்ற வரலாற்றறிஞர் சென்னைக்கு வடக்கே இப்போதைய தமிழ்நாட்டு எல்லைக் கோட்டில் நிற்கும் புலிக்கட்டு (பழவேற்காடு) தொடங்கி மைசூர் நாட்டுச் சித்தலதுர்க்கம் வரை சென்று தென்கன்னட நாட்டு எல்லையில் மேற்குக் கடற்கரையில் முடிகிறது எனக் கணக்கிட்டுள்ளனர்.[2]

அசோகர் காலத்துக் கல்வெட்டு எழுத்தின் வழி, தமிழ் நாட்டைப் பற்றிப் பல நல்ல குறிப்புக்கள் நமக்குக் கிடைக்கின்றன. அசோகர் எல்லைக்கு உட்படாத நாடுகளைத் தென்னாடுகள், வடநாடுகள் என இரு பிரிவாக்குகின்றனர். தென்னாடுகளைக் குறிக்கும்போது சோழ, பாண்டிய, கேரள சத்திய புத்திரரைக் குறிக்கும் கல்வெட்டுக்கள் முன் வருகின்றன. அசோகர் காலத்தில் தனி உரிமையோடு வாழ்ந்த தென்னாட்டு மக்களுள் இவ்வாறு மன்னர் சிலர் ஆட்சியில் சிறந்தனர் என அவர்


  1. Asoka, p. p. 34, 35
  2. ibid. p. 45.