இரண்டையும் இணைத்த எழுத்துக்கள்
45
அறிதல் வேண்டும். இனி, வடக்குச் சோழர் தலைநகரை ஆர்க்காடு எனக் குறிக்கின்றனர்[1]. தமிழ் நாட்டு எல்லையில் செங்கற்பட்டு. வடவார்க்காட்டு மாவட்டங்களில் ‘ஆர்’ தொடர்புடைய ஊர்கள் சில உள்ளன. இன்றும் தமிழ்நாட்டு மாவட்டங்கள் இரண்டு தென்னார்க்காடு, வடவார்க்காடு எனவே வழங்கப் பெறுகின்றன அல்லவோ! ‘ஆர்’ சோழருக்கு உரிய மாலை. அந்த மலர் நிறை மரங்கள் செறிந்த காடு ‘ஆர்க்காடு என வழங்கியிருக்கலாம். இன்றும் ஆர்க்கோணம், ஆர்ப்பாக்கம் போன்ற ஊர்கள் இப் பகுதியில் இப்பெயர்களோடேயே நிலவி வருவதை யாரும் அறியலாம். இவை அனைத்தும் சோழர் தொடர்புடையனவே; அவரது மாலையை மணம் பெறச் செய்தனவேயாம். இந்த உண்மை அறியாது இவற்றை ஆற்காடு", “ஆற்பாக்கம்’ எனத் தவறாக எழுதுகின்றார்கள் இக்காலத்து மக்கள். இனி, ‘ஆர்க்காடு அக்காலத்து வடபகுதிச் சோழர் தலைநகராயின், காஞ்சிபுரம் இல்லையா? என்ற கேள்வி எழும். காஞ்சிபுரம் அக்காலத்தில் ஒரு சிற்றுாராய் இருந்திருக்கலாம். பின்பு கடைச்சங்க காலத்தில் கரிகாலனே அக்காஞ்சியையும் அதைச் சுற்றிய பகுதியினையும் வளமாக்கினான் எனக் காண்கின்றோம். பின்பு தொண்டைமான் இளந்திரையன் காலத்தில் அது தலைநகராகவே திகழ்ந்தது. பின்பு பல்லவர்கள் காலத்துச் சிறந்தோங்கி இன்றளவும் நலமுற்று நிற்கின்றது. இவற்றின்வழி அசோகர் கல்வெட்டுக்களிலும், அக்காலத்தில் வெளிநாட்டார் வரலாற்றுக் குறிப்புக்களிலும் அசோகர் காலத்தில் சோழநாட்டு எல்லை விரிவாய் இருந்த தெனவும், இரு வேறு தலைநகர்களில் இருவேறு சோழ மன்னர்கள் ஆண்டார்கள் எனவும் கொள்ள வேண்டியுள்ளது.
இனிப் பாண்டியரைப் பற்றிக் காண்போம். அசோகர் பாண்டியரையும் பன்மையாலேயே குறிக்கின்றார். எனினும்,
- ↑ Asoka, p. 39; Ptolemy (A. D. 130, Indian Anti - quity); Asoka, p. 40.