இரண்டையும் இணைத்த எழுத்துக்கள்
51
சிறந்த செல்வவளமும் மக்கள் நலமும் பெற்று விளங்கியிருந்தது என்பதை அறிய மகிழ்ச்சி உண்டாகிறது!
பான்கெள[1] என்ற சீனயாத்திரிகர் எழுத்தின் வழித் தென்னாட்டுக் காஞ்சிபுரத்துக்கும் சீன நாட்டுக்கும் தொடர்பு இருந்தமையை அறிய முடிகிறது[2]. கி.மு. 140.86ல் ஆண்ட சீன மன்னர் காலத்தில் (Emperor Wou) காஞ்சிபுரத்துக்குப் பல பொருள்கள் அனுப்பப்பட்டனவாம். இரு நாடுகளுக்கும் வாணிபத் தொடர்பும் இருந்ததாக அறிகின்றோம். அவர்கள் கடல் வழியே காற்றாலும் அலையாலும் அலைப்புண்டு நெடுங்காலம் பயணம் செய்தார்கள் என்று கொள்ளவேண்டியுள்ளது. (காஞ்சி என்பது அவர்கள் மொழியில் Houang--tche என வழங்கப்பெற்றுள்ளது.) அவர்கள் வழியில் பலநாடுகளைக் கடந்து காஞ்சித் துறைமுகத்துக்கு வந்தவர்கள் போலும்! அசோகர் காலத்தில் ஆர்க்காடு தலைநகராய் இருக்க, சிறிய நகராய் இருந்த காஞ்சிபுரம், சிறிது காலத்துக்குள் கி.மு. இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மிகவும் வளர்ச்சியடைந்து, வெளி நாட்டு மக்களும் விரும்பி வந்து வாணிபம் செய்யும் நகரமாகிவிட்டது என எண்ண வேண்டியுள்ளது.
எகிப்திய ரோம நாடுகளிலிருந்து தரைவழி அலெக்சாந்தர் வடவிந்தியாவுக்கு வந்தது போன்றே கடல் வழியாகப் பலர் தெற்கே பாண்டி நாட்டுக்கு வந்துள்ளனர். பாண்டிய மன்னருடைய தூதுவர் கி.மு. 22ல் அகஸ்தஸ் (Caesar Agustus) அவையில் இருந்தனர் என்பது ஸ்டிராபோ[3] என்பார் குறிப்பிலிருந்து அறிய முடிகின்றது. அகஸ்தஸின் நண்பனாகிய ஏரோது என்னும் பெருமன்னனுக்கு நண்பரான