56
வரலாற்றுக்கு முன்
அவர்கள் ஆதாரங் கொண்டு காட்டுகிறார்கள். அதே நாளில் அந்த நினைவுக்கு எட்டாத வரலாற்றுக்கு முற்பட்ட சேய்மைக் காலத்தில் குமரி முனைக்குத் தெற்கே பரந்த நிலப்பரப்பு இருந்ததென்றும் அது மேற்கே மடகாஸ்கர் தொடங்கி கிழக்கே ஆஸ்திரேலியா வரையில் பரந்து இருந்த தென்றும் கூறுவர். அதைப்பற்றி ஸ்காட்டு எலியட்டு என்பவர் இழந்த லெமூரியாக் கண்டம்[1] என்னும் ஒரு நூலில் நன்றாக லிளக்குகின்றார். இவ்வாறு மேலை நாட்டு ஆராய்ச்சியாளர் தம் கூற்றுக்களை மெய்ப்பிக்கும் வகையில் தமிழ் இலக்கியங்கள் பலப்பல சான்றுகளை நமக்குத் தருகின்றன. குமரிக்குத் தெற்கே ஆறுகளும் மலைகளும் இருந்தன என்றும் அவற்றை ஒரு காலத்தில் கடல் கொண்டது என்றும் , அக்காலத்து ஆண்ட பாண்டியன் வடக்கே புதியனவாய் உண்டான கங்கையையும் இமயத்தையும் தனதாக்கிக்கொண்டு வாழ்ந்தானென்றும் சிலப்பதிகாரம் நன்கு எடுத்துக் காட்டுகின்றது. அந்தப் பழங்காலத்தி லிருந்தே பாண்டியர்கள் ஆண்ட காரணத்தினாலேதான் அவர்களுக்குப் பண்டையர் என்ற பெயர் வந்து, பிறகு பாண்டியர் என்னும் பெயராய் மருவியது என்பர் ஆராய்ச்சியாளர் சிலர். எப்படியாயினும், அந்த நிலம் அழிந்த ஒரு பேரூழிக் காலத்தே பாண்டியர் ஆண்டார் என்று கொள்வதில் தவறு இல்லையன்றோ? சிலப்பதிகாரத்தில் மதுரைக் காண்டத்தைத் தொடங்க நினைத்த இளங்கோவடிகள், அப் பாண்டியன் இழந்த குமரி மலையையும் பஃறுளியாற்றையும் கூறி, அவன் அவற்றிற்குப் பதிலாகக் கங்கையையும் இமயத்தையும் கொண்ட சிறப்பை விளக்குகின்றார்.
'அடியிற் றன்னள வரசர்க்கு உணர்த்தி,
'வடிவேலெறிந்த வான்பகை பொறாது
பஃறுளி யாற்றுடன் பன்மலை அடுக்கத்துக்
குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள
- ↑ The Lost Lemuria, by Scott Eliot