58
வரலாற்றுக்கு முன்
படியே உண்மை என ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றாலும், கபாடபுரம் போன்ற தலைநகர்கள் இருந்தன என்று கொள்வதில் தவறு இல்லை எனலாம். வான்மீகியார் தம் இராமாயணத்தில், சுக்கிரீவன் வானர சேனையைத் தேடவிட்ட காலத்தில், “பாண்டியர் தலை நகராகிய கபாடபுரத்திலும் தேடக்கடவீர்கள்” என ஆணையிட்டதாகக் கூறுவர். சமய இலக்கியங்களில்[1] குமரிக்குத் தெற்கில் மகேந்திரமலை என்ற ஒரு மலை இருந்ததாகக் குறிப்பிடப் பெற்றுள்ளது. மற்றும் கந்தபுராணத்தில் திருச்செந்தூருக்குத் தெற்கில் கடலில் மகேந்திர மலையும் நாடும், வழியில் கந்தமாதனக் கிரியும் இருந்தனவென்றும், அவை இருந்த நாட்டின் பகுதியையே சூரபதுமன் ஆண்டான் என்றும் குறிப்புக்கள் உள்ளன[2] . கந்தபுராணத்தில் அந்த மகேந்திரத் திற்கும் செந்திலை ஒட்டியிருந்த கந்தமாதனக் கிரிக்கும் இடையிலேதான் இலங்கை இருந்ததென்றும் கடல் பாய்ந்து சென்ற வீரவாகு அதையும் கடந்து சென்றான் என்றும் காட்டுவர் கச்சியப்பர். அவர் காட்டும் முருகனுடைய வழியில் முறையாகத் தமிழ்நாட்டு ஊர்கள் வருகின்றன. செந்திலுக்குத் தெற்கே நிலப்பரப்பும் மலைகளும் காட்டப் பெறுகின்றன. எனவே, புராணங்கள் வழியும் இக்காலத்துக் குமரிக்குத் தெற்கே பரந்த நிலப்பரப்பு இருந்ததெனக் கொள்ள இடமுண்டு. இந்த மகேந்திரமும் பிற பகுதிகளும் சூரபதுமனுக்குப்பின் கடல் கொண்டது என்ற உண்மையைக் கந்தபுராணம் தெளிவுறக் காட்டுகின்றது[3] பரிபாடலில் இத்தகைய நீர் ஊழிகள் பலப்பல வரும் என்பதை ஆசிரியர்கள் எடுத்துக் காட்டுகின்றார்கள். இன்றைய விஞ்ஞான முறைப்படி நிலத்தியல்பை ஆராயும் அறிஞர் அனைவரும் இத்தகைய ஊழிகள் உலகில் இயற்கையே என்றும், பழையன