பக்கம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

வரலாற்றுக்கு முன்


வந்த நெட்டிமையாரும் இதே நினைவிலேதான் நெடியோனை நினைந்து, ‘அவனது ஆற்று மணலினும் பலவாக இவன் வாழ்வானாக!” என வாழ்த்தினார்.

இனி இதே தொடரில்,

"நிலந்தரு திருவின் நெடியோய்! (பதிற், 82: 16)

என்று பெருங்குன்றுரர் கிழார் குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறையைக் காட்டி வாழ்த்துகின்றார். இங்கே வரும் தொடர், அவன் நிலத்தை நன்கு ஆளுகின்றான். எனவே குறிக்கின்றது. ஆகவே, இந்தத் தொடருக்கும் பாண்டியருக்கும் யாதொரு தொடர்பும் இல்லை.

பல்யாகசாலை முதுகுடுமியைப் பற்றிக் காண்போம். ‘முதுகுடுமி’ என்ற இவன் பெயரும் இவனைப் பாடியவரின் நெட்டிமையார்’ என்ற பெயருமே ஓரளவு தொன்மையைக் குறிக்க வருவன எனக்கொள்ளலாம். இவனைப் பாடினவாகப் புறநானூற்றில் ஐந்து பாடல்கள்[1] உள்ளன. இவனைப் பாடியவர் காரி கிழார் (6), நெட்டிமையார் (9,12,15), நெடும்பல்லியத்தனார் (64) ஆவர் மூவர் பெயர்களுமே பழமையைக் குறிப்பன. இனி இவர் தம் பாடலுள் காரிகிழார் இவன் ஆட்சி எல்லையை இமயம் முதல் குமரி எல்லைக்கு அப்பாலும் குறிக்கின்றார்,

வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்
தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்’

                                          (புறம் .6:1,2)

இவன் உருவும் புகழும் சிறந்தனவாய் இருந்தன எனக் குறிக்கின்றார். எனவே, இவன் இமயம் வரை ஆண்டான் என்று கொள்ளலாம். ஆளவில்லை என்று சொல்லினும் இவன் புகழ் இமயம் வரை பரவி இருந்தது எனக் கொள்ளு


  1. புறம். 6, 9, 12, 15, 64.