பக்கம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இமயமும் குமரியும்

65


வதில் தவறு இல்லையன்றோ! இவனைப் பாராட்டும் பாடல்கள் இரண்டு. இவன் நான்மறை முனிவரைப் பணிந்தமையையும் வேள்வி வேட்டதையும் குறிக்கின்றன. இவன் பெயரே இவன் இராசசூய யாகம் வேட்டவன் எனக் குறிக்கின்றது. நான்மறை என்றதற்கு நச்சினார்க்கினியர் இருக்கு யசுர் சாமம் அதர்வணம் என்ற நான்கும் அல்லாத வேறு வேதங்களைக் காட்டுவர். வேள்வி எத்தகையது எனக் கொள்ள முடியவில்லை. எனினும், சற்று ஆராய்ந்தால் இவன் ஆரியர் வேதத்தையும் யாகத்தையும் கொள்ள வில்லை என்று கூறுவதிலும், அவற்றைக் கொண்டான் என்பதிலும் தவறில்லை என்பது கொள்ளத்தகும். தொல்காப்பியர் காலத்து நிலந்தரு திருவின் நெடியோனுக்குப்பின், இவன் வாழ்ந்தவன் என்பது மேலே கண்ட வகையில் தெளிவாகின்றது. தொல்காப்பியத்தில் வேட்டல், வேட்பித்தல் போன்ற சடங்குகளும், பிற இரண்டோர் ஆரியர் பழக்க வழக்கங்களும் காட்டப்பெறுகின்றன. எனவே, இன்றைக்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் இன்றேனும் அதற்குப் பிறகு கடைச்சங்க காலத்துக்கு முன் ஆரியர் தமிழ் நாட்டில் நுழைந்து தம் கொள்கையைப் பரப்ப முயன்றனர் எனக் கொள்ளல் பொருந்துவதாகும். தக்கணப் பழங்கால வரலாற்றை எழுதிய பண்டர்க்கார் என்பவர் ஆரியர் கி.மு. ஏழாம் நூற்றாண்டில் தென்னாட்டுக்கு வந்தார் எனவும், பதஞ்சலிக்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே அவர் தம் கொள்கை தென்னாட்டில் பரவி இருக்க வேண்டும் எனவும் காட்டியுள்ளார்[1]. பதஞ்சலியின் காலத்தைச் சிலர் கி.மு. இரண்டாம் நூற்றாண்டு என்றும், சிலர் ஐந்தாம் நூற்றாண்டு என்றும் காட்டுவர். எனவே, இன்றைக்கு 2500 ஆண்டுகளுக்கு முன் அவர் தமிழ்நாட்டில் வாழ்ந்தனர் என்பது பெறப்படும். ஆகவே, அக்காலத்தை ஒட்டியோ அதற்குச் சற்றுப் பிந்தியோ கடைச்சங்க காலத்துக்கு முன்


  1. Early History of Dekkan, by R.G. Bhandarkar, 18-21