உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

வரலாற்றுக்கு முன்


வாழ்ந்தவனே பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என்று கொள்வது பொருந்துவதேயாகும். அவன் வாழ்ந்த காலத்தில் அவன் பேரும் புகழும் இமயம்வரை சிறந்திருந்தன என்பதும், எனவே அக்காலத்தில் தமிழர் இமயம் வரை பெருமையோடு பரந்து வாழ்ந்துவந்தனர் என்பதுமே நாம் கொள்ள வேண்டுவன.

இவனைத் தவிர்த்து, ‘இமயவரம்பன்' என்ற சிறப்புப் பெயர் பெற்ற வேந்தர்களே தமிழகத்தில் வாழ்ந்துள்ளார்கள். தமிழ்நாட்டுச் சேர, சோழ, பாண்டியர் மூவருமே இமயம் வரை சென்றிருக்கின்றனர்; இமயம் வரை வென்றும் இருக்கின்றனர். மூவேந்தர் தம் இலச்சினையும் இமயத்தில் பொறிக்கப் பெற்றன. இவற்றையெல்லாம் தமிழ்நாட்டு இலக்கியங்களும், வடநாட்டுத் தென்னாட்டுத் தொன்மை காட்டும் வரலாறுகளும் நன்கு விளங்குகின்றன. பெருஞ் சோற்று உதியன் சேரலாதன் என்பவன் பாண்டவர் துரியோதனாதியர் போரில் இடையிடைச் சோறிட்டு உதவினான் என்பதைப் புறம் இரண்டாம் பாட்டு எடுத்துக்காட்டுகின்றது. அவனைப் பற்றித் தனியாகவே ஆராய்ந்து காணலாம் எனக் கருதுகின்றேன். புலவர் முரஞ்சியூர் முடி நாகராயர் அவனை வாழ்த்துமுறையே இங்கு நாம் காண வேண்டுவது. அவருக்கு அவன் வாழ்வையும் உயர்ச்சியையும் செம்மையையும் எண்ணும்போது வடக்கில் ஒரு மலையும் தெற்கில் ஒரு மலையும் நினைவுக்கு வருகின்றன. அக் காலத்தில் இமயத்தில் அந்தணர் அந்தி அருங்கடன் இறுக்கும் காட்சியும் அக்காட்சியைச் சூழ்ந்த இயற்கை எழிலும் மான் துஞ்சலும் அவருக்கு விளங்குகின்றன. அனைத்தையும் பிணைத்து,

'திரியாச் சுற்றமொடு முழுதுசேண் விளங்கி
நடுக்கின்றி நிலியரோ அத்தை அடுக்கத்துச்
சிறுதலை நவ்விப் பெருங்கண் மாப்பிணை
அந்தி அந்தணர் அருங்கடன் இறுக்கும்