பக்கம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இமயமும் குமரியும்

69



மாநீர் வேலி வச்சிர நல்நாட்டுக்
கோனிறை கொடுத்த கொற்றப் பந்தரும்
மகதான் னாட்டு வாள்வாய் வேந்தன்
பகைப்புறத்துக் கொடுத்த பட்டிமண் டபமும்
அவந்தி வேந்தன் உவந்தனன் கொடுத்த
நிவந்தோங்கு மரபின் தோரண வாயிலும்"
                             (சிலம்பு, 5: 90, 97-104)

என்று இளங்கோவடிகள் திருமாவளவன் வடநாட்டு இமயப் படை எடுப்பைக் குறிக்கின்றார். இது சிலப்பதிகாரக் காலத்துக்கு நெடுநாட்கு முன்னரே நடைபெற்ற நிகழ்ச்சி என்பதை அவரே, புண்ணிய திசைமுகம் போகிய அந்நாள், (சிலம்பு. 5; 94) என இறந்த காலத்தால் சேய்மை சுட்டி விளக்குகின்றார். சிலம்பின் காலத்தில் திருமாவளவன் வாழவில்லை என்பதை வரலாறு காட்டுகின்றது. இளங்கோவடிகள் இப்படி விளக்கிக் கூறிய ஒன்றைத்தான் பட்டினப்பாலையில் உருத்திரங்கண்ணனார் 'வடவர் வாட' (276) என மிகச் சுருக்கமாகக் கூறிவிட்டார். இவ்வாறு பாண்டியரும் சோழரும் இமயம்வரை சென்றாலும், இமயவரம்பன்' என்ற சிறப்புப் பெயர் சேரனுக்கே அமைந் துள்ளதைக் காண்கின்றோம். இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் எனவே அவன் குறிக்கப் பெறுகின்றான். அவனைக் குமட்டுர்க் கண்ணனார் பதிற்றுப்பத்தில் இரண்டாம் பத்தால் பாராட்டிப் பேசுகின்றார்.

இரண்டாம்பத்தில் பதிகம் அவன் வென்றியைச் சிறப்பித்துப் பாராட்டுகின்றது.

'அமைவரல் அருவி இமயம் விற்பொறித்து
..................................
பேரிசை மரபின் ஆரியர் வணக்கி"

ஆண்டவன் எனப் பதிகத்தால் அவன் புகழப்பெறுகின்றான். இமயம் வரை ஆண்ட மன்னர் அவன் வாய்மொழி வழி