சிந்து வெளியும் தென்னாடும்
75
எனவே, அஃது ஆரியருக்கு முற்பட்ட ஒரு நாகரிகத்தின் அடிப்படையிலே அமைந்தது என்பது பொருந்தும். சிந்து வெளி நாகரிகம் ஆரிய நாகரிகமே எனச் சிலர் இக் காலத்தில் பேசியும் எழுதியும் வருகின்றனர். என்றாலும், சிறந்த வரலாற்று அறிஞர்கள் அந்தக் கொள்கை தவறானது என எடுத்துக்காட்டி, உண்மையை வற்புறுத்தி வருகின்றார்கள். பம்பாய் ஜெய் இந்து கல்லூரிப் பேராசிரியர் திரு. C.L. மாரிவாலா அவர்கள் தமது ‘மோகஞ்சோதாரோ’ என்னும் நூலில் அத்தகைய போக்காளர்தம் கொள்கைகளை ஒவ்வொன்றாக எடுத்துக் காட்டி, ஒன்றும் நிலை பெறக் கூடியது அன்று என்றும், சிந்துவெளி நாகரிகத்துக்கும் ஆரியருக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்றும் விளக்கியுள்ளார்கள்[1]. எனவே, இன்றைக்கு ஐயாயிரமாண்டுகளுக்கு முற்பட்ட சிந்துவெளி நாகரிகத்துக்குத் தொடர்புள்ளவர் யாவர் என்னும் ஆராய்ச்சி எழுதல் இயல்பேயாகும். மாரிவாலா அவர்களே திட்டமாக வேறு ஆராய்ச்சி வழிப் புது முடிவு காணப்பெறும் வரையில், சிந்து வெளி நாகரிகத் துக்குத் திராவிட மக்களே அடிப்படையாவார்கள் என்ற கொள்கையே மறுக்காது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் எனத் திட்டமாகக் குறித்துள்ளார்[2]. அவர் மட்டுமன்றி, இந்தச் சிந்து வெளி நாகரிகத்தின் ஆராய்வுக்குக் காரணர் களாயிருந்த ஜான்மார்ஷல், ஈராஸ் பாதிரியார் போன்றவர் களே இந்த உண்மையை ஏற்றுக் கொண்டிருப்பதோடு, இதற்கெனப் பல காரணங்களையும் விளக்கிக் காட்டியுள்ளார்கள். அவற்றை ஒன்றன் பின் ஒன்றாக