பக்கம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

வரலாற்றுக்கு முன்


ஆராய்வோமாயின், அந்த நெடுந்தொலைவிலுள்ள வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில்—உலக வரலாற்றிலேயே மிகப் பழைய காலமெனக் கணிக்கப்படும் அந்தத் தொன்மை நாளிலே-வடக்கும் தெற்கும் எவ்வாறு இணைந்து வாழ்வு நடத்தியுள்ள்ன என்பதை நன்கு அறிய இயலும். அறிஞர் பலர் இவ்வழியில் ஆராய்ந்துள்ளனர். நாமும் ஒரு சில கண்டு அமைவோம் :

ஸ்மித்து என்பார் தமது இந்திய வரலாற்று நூலில் சிந்து வெளி நாகரிகத்தைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்[1]. அதில் அவர் சிந்து வெளி நாகரிகம் ஆரியர் இந்தியாவுக்கு வருமுன்பே அமைந்த சிறந்த நாகரிகம் என்பதைக் குறிப்பிட்டுள்ளார்; அங்குள்ள எழுத்தும் பிற அமைப்புக் களும் மெசபட்டோமியாவை ஒத்த நிலையில் உள்ளன எனக் காட்டுகின்றார். சிலர் எகிப்தும் இந்த நாகரிக அமைப்பில் பங்கு கொள்ளக்கூடும் என்ற கொள்கையினையும் ஆராய்கின்றனர். எகிப்து, சிந்துவெளி நாகரிகம் இரண்டும் மெசபட்டோமியா நாகரிகத்திலிருந்து கடன் வாங்கினவையாய் இருக்கலாம் என்றும், அவை இரண்டும் தத்தம் நாட்டுச் சூழலுக்கு ஏற்பவும், அங்கங்கே அதனதன் முன்னர் நிகழ்ந்துள்ள நாகரிகம் பண்பாடு முதலியவற்றிற்கேற்ப மாறியிருக்க வேண்டும் என்றும் காட்டுகின்றார். எனவே, அக்காலத்தில் சிந்துவெளியிலும் அதை அடுத்த பரந்த இந்திய நாட்டிலும் தனித்த பண்பாடும் நாகரிகமும் நிலவியிருக்க வேண்டும் என்ற கொள்கையை அவர் நினைப்பூட்டுகின்றார். அந்தக் கொள்கை தென்னாட்டு மக்களுடைய கொள்கையாகத்தான் இருக்க வேண்டும் என்பதை வரலாற்று ஆசிரியர் பலர் உறுதி செய்துள்ளனர்.

கல்கத்தா பல்கலைக் கழகத்து வரலாற்றுப் பேராசிரியர்களான திருவாளர்கள் சின்னாவும் பானர்ஜியும்


  1. Oxford History of India, by Vincent A. Smith (Third Edition), pp. 26.32.