உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

5

 ஆண்டுவரை செல்லும் அந்தச் சிந்துவெளி - குமரி முனைக் கால எல்லையை மேல் வரம்பாகக்கொண்டு, இரண்டிற்கும் இடையில் நாடு இருந்த நிலையை ஒரளவு காண முற்படுவதே இந்த நூலின் நோக்கமாகும். குமரி தாழ இமயம் உயர்ந்த நாள் எது என்று சொல்ல முடியாவிட்டாலும் அதுவும் உலக வாழ்நாளில் ஒருநாள்தானே என்ற எண்ண அடிப்படையில் தொடங்கி, கடைச்சங்ககால இலக்கியங்கள் காட்டும் வரலாற்று எல்லை வரையில் தெரியும் ஒரு சில பொருள்களை ஆராய்ந்தே இந் நூல் நாட்டுக்குச் சில கருத்துக்களைத் தருகின்றது. இக்கருத்துக்களின் அடிப்படையில் பல அறிஞர் கள் மேனாட்டிலும் வடநாட்டிலும் ஒரு சிலர் தென்னாட்டிலும் ஆராய்ந்துள்ளார்கள். எனினும், அக்காலத்தில் இந்திய நாட்டின் வடக்கும் தெற்கும் இணைந்த நிலையை அவர்கள் தொகுத்துக் காட்டவில்லை. எனவே அவர்களது ஆய்வின் துணைகொண்டே இத்தொகுப்பை நான் வெளியிட நினைத்தேன். இதில் கூறப்பட்ட முடிபுகளோ, அன்றிக் கருத்துக்களோ, முடிந்த முடிபினைப் பெற்று விட்டன என்று நான் வாதிட விரும்பவில்லை. இன்று வரலாற்றுலகில் காணும் பல்வேறு பொருள்களும் அவை பற்றி எழுந்த நூல்களும், பிறவும் இந்த முடிபுகளையே நமக்குத் தருகின்றன என்றே நான் காட்ட முயன்றுள்ளேன். வருங்கால ஆராய்ச்சி உலகம் எத்தனையோ புதுப்புது உண்மைகளைக் கண்டு விளக்கலாம். அக்காலையில் இவ்வர லாற்று எல்லையின் வாழ்க்கை முறைகளும் பிறவும் எவ்வாறு அமைந்ததென்று யார் சொல்ல இயலும்? இந்திய நாட்டு வரலாற்றையே சிந்துவெளி அகழ்ந்தெடுப்பு (Indus Walley Civilization) மாற்றி அமைத்ததை உலகம் அறியுமே. எனவே, வருங்கால ஆராய்ச்சிக்கு ஏற்ப ஒரு சில முடிபுகள் மாற்றமும் பெறலாம். எனினும், இன்றைய ஆய்வு நெறிவழி இம்முடிபுகள் ஏறகத்தக்கனவே என எண்ணுகிறேன். அன்றி இப்போதும் முடிபுகள் மாற்றம் பெற வழியும் விளக்கமும் இருப்பினும் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்ளவும் தயங்கேன். இத்துறையில் இது முதல் முயற்சி. வரலாற்றுக்கு முன்