80
வரலாற்றுக்கு முன்
காலத்திலிருந்து சிறந்து வந்துள்ளார்கள் என்பது புலனாகின்றது.
டாக்டர் ஹால்[1] என்பார் திராவிடர்கள் சிந்து வெளி நாகரிகத்துக்கு முன் சிந்து, பஞ்சாபு, பலுசிஸ்தானம் உட்பட்ட வடவிந்தியாவை வாழிடமாகக் கொண்டு சிறந்திருந்தார்கள் என்று காட்டுகின்றார்.[2] மற்றும், அவர் புறத்தோற்றத்தில் 'மண்டை ஓடு' முதலியவற்றை நோக்கிச் சிலர் அம்மக்கள் திராவிடரினும் வேறுபட்டவர் என நினைப்பினும், உண்மையில் ஆராய்ந்து பார்ப்பின், திராவிடர் மெசபட்டோமியாவிலிருந்து வந்ததாகக் கொள்ளினும், அன்றி இந்திய நாட்டுப் பழங்குடிகளே எனக் கொள்ளினும் சிந்துவெளி நாகரிகம் அவர்களுடையதே என அறுதியிடலாம் எனவும் காட்டுகின்றார்;[3] இந்த நாகரிகம் வேத காலத்துக்கு-அதாவது ஆரியர் இந்தியாவுக்கு வருதற்கு முற்பட்டது என்பதையும் எடுத்துக்காட்டுகின்றார்[4]. இவ்வாறு பலரும் சிந்துவெளி நாகரிகம் திராவிட நாகரிகமே என்பதை வலியுறுத்திக் காட்டியுள்ளனர்.
சிந்துவெளியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட ஆரப்பாவைப் பற்றி விளக்கமாக எழுதியுள்ள ஆசிரியர்,[5] மோகஞ்சோதாரோவைப் போன்றே அங்குள்ள பல்வேறு அமைப்புக்களையும், வாழ்வியற்பொருள்களையும், வழிபாட்டுப் பொருள்களையும் பிறவற்றையும் எடுத்து விள்க்கி, அவை அனைத்தும் திராவிடருடையவற்றை ஒத்துள்ளன என்பதைச் சுட்டிக் காட்டுகின்றார். இதே உண்மையினை அண்மையில் அகழ்ந்