82
வரலாற்றுக்கு முன்
நூற்கயிறுகளின் அமைப்புக்களும்,[1] பிறவும் ஆரப்பா நாகரிகம் இக்காலத்துத் தமிழ் நாட்டு நாகரிகத்தையும் பண்டைய திராவிட நாகரிகத்தையும் ஒத்து விளங்குகின்றது என்பதை எடுத்துக் காட்டுகின்றன என்பதை நன்கு விளக்குகின்றார். மற்றும், வண்ணம் தீட்டப் பெற்ற மட்பாண்டங்களும், தானியக் களஞ்சியங்களும், வேறு பல அமைப்புக்களும் இன்றைய தமிழ் நாட்டுக் களஞ்சியங்களையும், பாண்டங்களையும் உணர்த்துகின்றன என்பதையும் ஒன்றன்பின் ஒன்றாக விளக்குகின்றார். இவ்வாறு ஆரப்பாவும் பிற சிந்து வெளி அகழ்பொருள்களும் காட்டும் பண்டைய நாகரிகத்தையும் அது திராவிட நாகரிகத்தை ஒத்திருப்பதையும் ஜான்மார்ஷல் தம் நூலில் நன்கு விளக்குகின்றார்.[2] அவர் அடிபற்றி ஆராய்ந்த ஹீராஸ் பாதிரியார் போன்ற அறிஞர் பலர் இவ்வுண்மையை மேலும் மேலும் ஆராய்ந்து விளக்கிக் கொண்டேயிருக்கின்றனர்.
வடநாட்டு மேனாட்டு ஆராய்ச்சியாளர் பலரால் திராவிடருடைய—தென்னாட்டு மக்களுடைய—தொடர்பு கொண்ட நாகரிகமே சிந்துவெளி நாகரிகம் என்பதை எவ்வாறு காண முடிந்தது? அச்சிந்து வெளியில் அகப்பட்ட பல்வேறு பொருள்களைக்கொண்டே இந்தக் கொள்கையை அவர்கள் எண்ணிப் பார்த்து அறுதியிட முடிந்தது. இதன் அடிப்படை ஆசிரியரான ஜான் மார்ஷல் என்பவர், தம் பெருநூலில் இவற்றிற்கெல்லாம் விளக்கம் தருகின்றார். அவற்றுள் ஒரு சிலவற்றை நாமும் காண்போமானால், உண்மை நன்கு தெளிவு பெறும் என்பது உறுதி.
சிந்துவெளி நாகரிகத்தில் சத்தி வழிபாடு முக்கிய இடம் பெற்றுள்ளது. இச்சக்தி வணக்கம் ஒரு காலத்தில் இந்தியா