உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிந்து வெளியும் தென்னாடும்

85


ஆகம அடிப்படையிலே உள்ளன. கோயில்களின் அமைப்புக்களும் அப்படியே. எனவே, இலிங்க வழிபாடு ஆரியர் வருமுன் தமிழ் நாட்டில் மட்டுமன்றி, இந்தியா முழுவதும் மட்டுமன்றி, பிற இடங்களிலும் பரவியிருந்ததென்பது நன்கு புலனாகும்.

சிவனுடைய உருவமும் சிந்து வெளியில் அன்றே அமைந்துள்ளது. அது மூன்று முகங்களோடு கூடியுள்ளது. சிவவழிபாடு மிகப் பழமையானது. திருவாரூரில் புற்றிடங் கொண்ட இறைவனைப் பாடும் திருநாவுக்கரசர், அவன் கோயில் கொண்ட நாளை எண்ணி எண்ணிப் பார்த்து, முடிவில் எல்லை காண முடியாது திகைக்கின்றார்.[1] சிந்துவெளிச் சிவவழிபாட்டை நினைத்து ஜான் மார்ஷலும் அவ்வாறே வியக்கின்றார். சிவன் உருவம் மூன்று முகங்களோடு இருப்பதுடன் அதன் அடியில் யானை, புலி, காண்டாமிருகம், எருமை போன்ற உருவங்களும் உள்ளன. இவை இறைவன் 'பசுபதி' என்பதை நன்கு எடுத்துக் காட்டுகின்றன. இவற்றை ஆராய்ந்து ஆராய்ச்சி வல்லுநராகிய கோபிநாதராவ் அவர்கள், சிந்து வெளியின் சிவ உருவம், தமிழ் நாட்டில் வடவார்க்காட்டு மாவட்டத்திலுள்ள மேச்சேரியில் உள்ள மூன்று முகங்கொண்ட சிவ வடிவத்தை ஒத்துள்ளது எனத் திட்டமாக எழுதியுள்ளார்[2] ஜான் மார்ஷல் அவர்கள் தனித்த இலிங்க வழிபாட்டுடன், பிற வகை வழிபாட்டு முறைகளும் சேர்த்தே இவ்வுருவ வழி பாட்டுக்கு அடிகோலியிருக்க வேண்டும் எனக் காட்டுவர். தமிழ் நாட்டுச் சைவ சமய உண்மையாகிய 'முப்பொருள் உண்மை'யே உலகில் மிகப் பழைய கருத்து என்றும், அது இந்தியாவில் மட்டுமன்றி அந்தப் பழைய காலத்தில் மெசபட்டோமியாவிலும் பரவியிருந்தது என்றும் காட்டுகின்


  1. திருவாரூர்த் திருத்தாண்டகம், அப்பர்.
  2. Elements of Hindu Iconography, by T. A. Gopinathan Rao, p. 380.