வரலாற்றுக்கு முன்
64
றனர்[1] இந்த முன்று முகச் சிவவடிவத்தைப் பின் வந்தவர் திரிமூர்த்தி என மாற்றிக் கூற முயன்று வெற்றி காணாது விட்டுவிட்டனர்.
மற்றும் அந்தச் சிவவுரு 'யோகநிலை'யில் உள்ளது. யோகம் இந்தியாவின் பழங்காலத்து முறைகளுள் ஒன்று. ஆரியர் வருமுன்பே இந்தியாவில் யோகம் பயின்றோர் பலர் இருந்தனர். காப்பிய காலத்துக்குப் பிறகே அஃது ஆரியர் வாழ்வில் இடம் பெற்றது[2]. இந்த உருவமே பின்னால் ஆரியர்களின் உருத்திரனாகக் கொள்ளப்பட்டது. சிந்து வெளிச் சிவ உருவத்தில் தலையில் உள்ள இரு பிரிவுக் கொம்பே, அஃது ஆரிய நாகரிகத்துக்கு முற்பட்டது என்பதைக் காட்டுகின்றது. இதையே பின்னால் ஆரியர் 'திரிசூல'மாக்கி, ஆயுதம் என்றனர்[3]. மற்றும் சிவன் உருவம் மான்தோல் ஆசனத்தில் இருந்து உபதேசம் செய்வது போல அமைந்துள்ளது. மான் தோல் ஆசனம் உபதேசத்துக்குக் கொள்ளும் நல்லாசனமாகப் போற்றப்படுகின்றது.
'சிவன்' என்னும் சொல் ஆரியருடையதன்று. வேதத்தில் சிவனைப் பற்றிய குறிப்பு இல்லை. பின்னர், ‘உருத்திரன்' என்றே அவன் குறிக்கப்பெறுகின்றான். ஆனால், தமிழில் இச்சிவன் பழங்காலத்திலிருந்து வழக்கில் இருந்து வருகின்றான். ‘செம்மை’ என்ற பண்பின் அடியாகவே சிவன் பிறந்தான் என்பர்[4] எனவே, சிவன் என்பது திராவிடர் வேர்ச்சொல்லாகிய 'செம்மை'யிலிருந்தே பிறந்திருக்க வேண்டும்[5]." மற்றும், சத்தியும் சிவமும் இணைந்த வழிபாடு