பக்கம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88

வரலாற்றுக்கு முன்


அடியிலிருந்தே தட்சிணாமூர்த்தி சொல்லாமல் சொல்லிப் பல உண்மைகளை விளக்கினார். புத்தருக்குப் போதி மரத்தின் அடியிலேயே அருள் நோக்கு அமைந்தது. தமிழ் நாட்டுக் கோயில் வரலாற்றில் மரங்களே முக்கிய இடம் பெற்றுள்ளமையை யாவரே அறியாதார்! ஆரியர் காலத்துக்கு முன்பே தமிழ் நாட்டிலும், பரந்த இந்திய நிலப்பரப்பிலும் இம்மர வழிபாடு இருந்து வந்தது.

விலங்கு வழிபாடு தமிழ் நாட்டிலும் சிந்து வெளியிலும், மெசபட்டோமியாவிலும், சுமேரியாவிலும் சிறந்திருந்தது[1] மனித முகத்தோடு கூடிய விலங்குகளும், விலங்கு முகத்தோடு கூடிய மனித உடலும் போற்றப்பட்டன. புலியும் யானையும் சத்தியுடன் இணைத்து வழிபடப்பட்டன. காண்டாமிருகம், காட்டு எருமை போன்றவை சிவ வழிபாட்டுடன் இணைக்கப் பட்டன. அனைத்துக்கும் மேலாக ‘எருது' சிறந்த முறையில் வழிபடப் பெற்றது. சிந்து வெளி நாகரிகத்தில் எருது முக்கிய இடம் பெற்றுள்ளது. வழிபாட்டிலும் மக்கள் வாழ்விலும் இது பெரும்பங்கு கொண்டிருந்தது என்பதை அனைவரும் நன்கு அறிவர். சிறப்பாக எருதுகளின் கொம்புகள் தூய்மை கருதி வழிபடப்பெற்றன.

அனுமன் வழிபாடு ஆரியர்களுக்கு முன்பே நாட்டில் உள்ளவர்களால் வழிபடப் பெற்று வழக்கத்தில் இருந்தது. அனுமன் என்ற பெயரே தமிழ்ப்பெயர் என்பதையும் அதுவே பிறகு மாறி ஆரியமொழியில் இடம் பெற்றதென்பதையும் வரலாற்று அறிஞர்கள் நன்கு காட்டியுள்ளார்கள். ஆண்+மந்தி என்ற சொற்களின் சேர்க்கையே ஆண்மந்தியாகிப் பின் அனுமன் ஆகிப் பின்னும் ஹனுமான் என ஆரிய மரபைத் தழுவியது. பாதி விலங்கு பாதி மனித நிலையைக் காட்டலே-மனிதன் குரங்குவழி உருவானான் என்ற உண்மையைக் காட்டலே. இக்குரங்கு வழிபாடு அக்காலத்தில் அமைந்


  1. Indus Civilization, p. 67.