90
வரலாற்றுக்கு முன்
காலத்தில் இந்நீர் வழிபாடு இந்தியா முழுவதுங் பரவி இருந்தது எனக்கொள்ளல் பொருந்துவதேயாகும். இந்த நீர் தம்மைத் தூய்மைப்படுத்துகின்றது என்ற உண்மையை உணர்ந்தவர் தமிழர். சிந்து வெளியில் அமைக்கப்பெற்ற குளமும், குளக்கரையிலிலுள்ள குளிக்குமிடங்களும், தென்னாட்டுக் குளங்களையும் அவற்றைச் சார்ந்தவற்றையும் ஒத்திருத்தல் காணலாம். மற்றும், இந்த நீர் வழிபாட்டு முறையிலேதான் ஆற்றங்கரை நாகரிகங்கள் உலகம் ழுழுவதும் உண்டாகியிருக்க வேண்டும் எனக் கொள்ளல் தவறாகாது. சிந்துவெளி நாகரிகமும், காவிரிக்கரை நாகரிகமும், எகிப்து, மெசட்டோமியா, சீன நாகரிகங்களும் ஆற்றங்கரை நாகரிகங்களேயல்லவா? எனவே, அத்தகைய முதல் வாழ்வை நல்கிய ஆற்றையும் அதுவழியே பெருக் கெடுத்தோடிவரும் நீரையும் யாரே போற்றாதிருப்பர்!
கிருட்டிணன் வழிபாடு சிந்துவெளி நாகரிகம் அறியாத ஒன்று. கிருட்டிணன் வழிபாடு காலத்தாற் பிந்தியது [1] மற்றும், கட்டடக்கலை, வண்ணக்கலை முதலிய பலவும் சிந்துவெளி நாகரிகத்தின் சிறப்பை விளக்குவதோடு அவை பழந்தமிழ் நாட்டு - திராவிட நாட்டு , திராவிடர் தம் பண்பாட்டையும் வாழ்வையும் உணர்த்துகின்றன என்பது உண்மையேயாகும். -
ஜான் மார்ஷல் கூறுகின்றபடி அக்காலத்து இந்திய நாகரிகம்-சிந்து வெளி அடிப்படையில் அமைந்த நாகரிகம்அக்காலத்தே உலகில் வாழ்ந்த பிற சுமேரிய எகிப்திய நாகரிகங்களைக் காட்டிலும் மிக மிகச் சிறந்ததாய் விளங் கிற்று என்பதில் ஐயமில்லை[2]. இவ்வாறு இன்றைக்கு ஐயாயிரமாண்டுகளுக்கு முன்பே பரந்த இந்தியநாட்டின் தெற்கும் வடக்கும் பல்வேறு வகைகளால் இணைந்து