94
வரலாற்றுக்கு முன்
இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என்று நால்வகைச் சொற்களைக் குறிக்கின்றார். இங்கே வட சொல்லுக்கு உரை கூற வந்தவர்கள் வடசொல் என்பது ஆரிய சொற்போலும் சொல் என்றும் (இளம் பூரணர்) ஆரியச்சொல் (நக்கினார்க்கினியர்) என்றும் காட்டுவர். யாரும் 'சமஸ்கிருதம்' என்று குறிக்கவில்லை. மற்றும், உரையாசிரியர்கள் காலத்தில் ஆரியச் சொல்லும் வட சொல்லும் ஒன்றாகக் கருதப்பட்டனவென்பது தெளிவாயினும், இளம்பூரணர் வழி, வடசொல் ஆரியச்சொல் போன்ற தமிழ்ச் சொல்லையே குறிக்கும் எனக்கொள்ளல் வேண்டும் இனி இந்த எச்ச இயல் ஐந்தாம் சூத்திரம் வடசொல். பற்றியே வருவது,
'வடசொற் கிளவி
வடவெழுத் தொரீஇ
எழுத்தொடு புணர்ந்த
சொல்லா கும்மே'
என்பது அது. அதற்கு உரையாசிரியர்கள் பலவகையில் விளக்கம் தருகின்றனர். 'வடசொற் கிளவி' என்று சொல்லப்படுவது 'ஆரியத்திற்கே உரிய எழுத்தினை ஒரீஇ இரு திறத்தார்க்கும் பொதுவாய எழுத்தினை உறுப்பாக உடையவாகும் சொல் என்றவாறு' என்பர் இளம்பூரணர். நச்சினார்க்கினியரும் சேனாவரையரும் இதே பொருள் காட்டுவர். தெய்வச்சிலையார் வடமொழிச் (பிராகிருதம்) தொற்களையும் சேர்ப்பார். எனினும், அச்சொற்கள் வழங்கும் முறைகண்டு 'வடசொல்லுள்ளும் பெயரல்லது செய்யுட்கு உறுப்பாய் வாரா' எனச் சேனாவரையரும், 'திசைச் சொல்லும் வடசொல்லும் பெரும்பாலும் பெயர்ப் பெயராயும் சிறுபான்மைத் தொழிற் பெயராயும் வருதலின்றி ஏனைய வாரா' என நச்சினார்க்கினியரும் உரை கூறுவர். அனைவரும் இதற்குக் குங்குமம், நற்குணம், காரணம், காரியம் போன்ற சொற்களைக் காட்டுவர். எனவே உரையாசிரியர்கள் காலத்தே வடசொல் என்பது ஆரியச்