பக்கம்:வரலாற்றுப் புதையல்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 உலகத்தையே ஈன்று அதனைக் காக்கும் அன்னையின் நிலை எப்படி இருக்கும் பிறவிப் பிணியில் வாடும் தன் குழந்தைகளுக்கு ஈசனின் அனுக்கிரகம் என்ற மருந்தை சிவகாமியாக, சிவனுக்கருகிலிருந்து, அவன் அருளை யேற்று தன் கிருபையெனும் அமுதமாய் மாற்றியல்லவோ பக்தர் களுக்குப் பாலிக்கின்றாள். இப்படிச் சிவகாமியாய் நின்ற கோலம் எல்லா ஆலயங்களிலு முண்டெனினும் இரண்டே தலங்களில் மூல நாயகியாய் விளங்குகிறாள். அவை சோணாட்டுத் தில்லை யும், தொண்டை நாட்டு அங்கம்பாக்கமும் தாம். காஞ்சி காமாட்சிக்கு வெகு அருகில் அமர்ந்துவிட்டதில் வேறொரு விசேஷமுண்டு. காமாட்சி உறையும் இடங் களுக்கு மாத்திரம் காமக்கோட்டம் என்ற பெயரில்லை. சிவகாமி வதியும் பதிகளுக்கும் காமக்கோட்டம் என்று தான் பெயர். சிதம்பரத்தில் சிவகாமி வீற்றிருக்கும் நிலையை, காமக்கோட்ட முடைய பெரிய நாச்சியார் என்று தான் கூறுவார்கள். அதே போல் காஞ்சி காமக் கோட்டத்திற்கு இணையாக இங்கும். ஒரு காமக் கோட்டத்தை ஏற்படுத்திய பெருமை அன்னை சிவகாமிக்கு உண்டு. புராணம் புராணம் என்று இவ்வூருக்கு இதுவரை ஏட்டில் எழுதப்படவில்லை. ஆனாலும் முதுபெரும் அர்ச்சகர் கர்ண பரம்பரையாய் வரும் வரலாறு இதுதான் என்று கூறுவதைக் கேட்போம்: வெகு காலத்திற்கு முன்பு தில்லை அந்தணர் ஒருவர் சிவகதியடைந்த தன் தந்தையின் அஸ்திகளைக் கங்கையில் சேர்த்துப் புனிதமாக்க, சிதம்பரத் திலிருந்து வாரணாசி நோக்கிச் செல்லுங்கால் இக் கி ரா ம த் ைத அடைந்தபொழுது இருட்டிவிட்டது. பிரயாணத்தை தொடர வேண்டுமானால் இருளில் ஆற்றைக் கடக்கவேண்டும். செய்வதறியாது திகைத்த இச் சஞ்சாரியை ஊரினர் இரவு தங்கிச் செல்லலாம் எனக்