பக்கம்:வரலாற்றுப் புதையல்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 ஓங்கிய தென்னைகள் இழைத்துள்ளதால் வேனிலின் வெம்மைபுகா இக்கிராமத்தில் இப்பொழுது மூன்று கோயில்களுள்ளன. ஒன்று அம்பலவாணருடையது. இரண்டாவதைக் கல் வெட்டுகள் வாணிசுவரர் என்று விளம்புகின்றன. மூன்றா வது ஒரு கருவறை மட்டுமே கொண்ட பெருமாள் கோயில். வாணிசுவரமுடைய நாயனார் எனக் கல்வெட்டுகளால் அறியப்படும் வாணிசுவரர் ஆலயம்தான் மிகப்புராதன மானது. பெருமாள் கோயிலிலுள்ள விஷ்ணு பல்லவ அல்லது முற்காலச் சோழற்காலத்தியது என்பதை அதன் பிரயோக சக்கரமும், கிரீட அமைப்பும், ஆடை மடிப்பும் தெளிவாய்ப் புலப்படுத்துகின்றன. கவனிப்பின்றிச் சிலாரூபம் மிகவும் பழுதாயுள்ளது. அதேபோல் வாணிசுவரர் கோயிலும் இடிந்துவிட்டது. தில்லைவாசியால் நிறுவப்பட்ட அம்பல வாணர் கோயில் கிலமாகிவிட, அங்குள்ள மூர்த்திகள் பல்வேறு இடங்களைத் தேடி அமர்ந்து விட்டனர் போலும். இடிந்த கோயிலின் கற்கள் கொண்டு எழும்பியவை இன்று காட்சியளிக்கின்றன. கல்வெட்டுகள் மூலம் தன் பழமையையும் பெருமையையும் வெளியிட்டு நிற்கும் வாணிசுவரர் கோயில்தான் அம்பலவாணர் கோயிலாக இருந்திருக்க வேண்டும். அம்பலவாணர் வர்ணிசுவரராகத் திரிந்திருக்கலாம். அதற்கேற்பத் தற்பொழுதுள்ள அம்பல வாணர் கோயிலின் அம்பலவாணர், சிவகாமி அம்மை, தனி அம்மன் யாவும் பூமிக்கடியிலிருந்து கிடைத்ததாம். ஆலயமும் சரித்திரமும் முதலாம் இராசராச சோழன் காலத்தே மேன்மை யுடன் விளங்கிய வாணிசுவரர் கோயில் இன்று பாழடைந் துள்ளது. ஊத்துக்காட்டுக் கோட்டத்து தேவதானமான இவ்வூரில் இக் கோயிலுக்கு ராசகேசரி ராசராசன் காலத்தே விளக்குகள் , எரிப்பதற்கு ஆடுகள் வழங்கப்பட்ட செய்தி யைத் தாங்கும் தூண்கள் தேய்ந்து உருமாறிவிட்டன.