பக்கம்:வரலாற்றுப் புதையல்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 வாணர்தாம் சிதம்பரேசர் என்ற உண்மையை உணர்ந் தேன். மேலும் சிதம்பரத்துக்கும் எங்கள் ஊருக்கும் உள்ள தொடர்பினைப் பற்றிப் பெரியோர்கள் சொல்லக் கேட்டறிந்தேன். என் ஊரின் சூழலும் கோயில் அமைப்பும் ஆற்று மணலும் நீரோடையும் என் இளமைக்காலத்தில் அடிக்கடி என்னைக் கோயிலுக்குச் செல்லத் தூண்டும். எங்கள் ஊர் இன்று அங்கம்பாக்கம் என்று இருந்தாலும் அது இரண்டு ஊர்கள் இணைந்த ஒன்று என்றே பெரியவர்கள் சொல்லுவார்கள். ஊரின் மேற்பகுதியே அங்கம்பாக்கம் என்றும் நான் இருக்கும் கீழ்ப்பகுதியாகிய ஒரே தெரு வான்பாக்கம்' என்றும் தனியாக இருந்து, பிறகு ஒரு காலத்தில் இணைய அங்கவான்பாக்கம்' என்று பெயர் பெற்று, கடைசியில் அங்கம்பாக்கம் என்ற பெயரே நிலைத்துவிட்டது என்பர். சில பன்ழய ஆவணங்களிலும் அங்கவான்பாக்கம்’ என்றே இருப்பது அதற்குச் சான்றாகும். மேலும் ஊரில் நடைபெறும் மாரியம்மன் காப்புக் கட்டும் விழாவின் கடைசி நாளுக்கு முன்னர் நடை பெறும் தெருக்கூத்தில், அக்கூத்து நடத்துபவரின் தலைவன் விடுதோறும் தரும் பரிசை ஏற்று இவ்வங்கம்பாக்கம் வான் பாக்கம் கிராமம்' என்று சொல்லிப் பிறகு வாழ்த்துவது ம்ரபாக இருந்தது. கோயில்களின் அமைப்புகளும் பிற திட்டங்களும்,இந்த இரு ஊர் அமைப்பினை உறுதி செய் .கின்றன. - - - . . இரண்டு சிவன் கோயில்கள், இரண்டு பெரும்ாள் கோயில்கள் (சந்நிதி), இரண்டு பிள்ளையார், மாரி, பிடாரி கோயில்கள் தனித்தனியாக இருப்பதோடு, ஊர்த் தொழி லாளர்களும் இரண்டு பிரிவாகவே உள்ளனர். இன்றும் இந்த உண்மைகளைக் காணலாம். வான்பாக்கத்துக் குரியதே கிழக்கே ஊர் எல்ல்ைக்கு வெளியேயுள்ள வாணிஸ்வரர் கோயில். அதை அடுத்தே பெருமாள், பிள்ளையார், பிட்ாரி, மாரியம்மன்:கோயில்களும் உள்ளன: