பக்கம்:வரலாற்றுப் புதையல்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i.5 இச் சிவன் கோயில் சோழர் காலத்தியது. ஊர் இரண்டும் இணைந்தபோது, இதிலுள்ள சில சிலாவிக்கிரகங்களை அம்பலவாணர் கோயிலில் கொண்டுவந்து வைத்து ஆண்ட வனையும், அம்பலவாணிஸ்வரர்' என்றே அழைத்தார்கள். எனினும், ஊரின் பெயரைப்போலவே இறைவன் பெயரும் அம்பலவாணர் எனவே அமைந்துவிட்டது. கிழக்கே உள்ள வாணிஸ்வரர் கோயிலின் சிதைந்த கற களின் மேல் நான் நண்பர்களுடன் பல நாட்களில் மாலைப் பொழுதினைக் கழித்ததுண்டு. அப்போது அக் கோயிலின் சுற்றுச் சுவர்களிலுள்ள கல்வெட்டுக்களைப் பற்றி எண்ணியதுண்டு. எனினும் படிக்கத் தெரிவதில்லை. பின் த்ொல்பொருள் ஆய்வுக்குழுவினர் அவற்றைப் ԼIւգ. எடுத்துள்ளனர் என்பதை அறிந்தேன். அக் கல்வெட்டுக் களைப் பற்றியும் அதில் நேர்ந்த கொடை நலம் பற்றியும் அண்மையில் தினமணி நாளிதழ் (சுடர்) கட்டுரை வெளி வந்ததைப் பலரும் படித்திருப்பர். (அதுவே திரு. சோமலெ அவர்கள் மூலமாக என்னை இக்கட்டுரை எழுத வழி செய்தது.) கல்வெட்டின் வழி இறைவன் வாணிச்சுரமுடைய நாயனார் என அழைக்கப் பெறுகிறார். இக்கோயிலுக்கு விளக்கு எரிப்பதற்கென, முதலாம் இராசராசன் காலத்தே ஆடுகள் வழங்கப்பெற்ற கொடையினை விளக்கும் கல்வெட்டினைத் தாங்கிய துரண்கள் நிலைமாறிவிட்டன. இராசராசன் படைத்தலைவனும் தஞ்சைப் பெரியகோயில் திருச்சுற்று மாளிகையைக் கட்டினவனுமாகிய மும்முடிச் சோழப் பிரமாதிராயன் வழியே பக்கத்தில் உள்ள திருமுக் கூடலில் செம்பியன் மாதேவி பெயரால் அம்ைந்த இராச ராசன். மண்டபத்தைக் கண்ட இப்பிராந்தியத் தல்ைவன் மும்முடிச் சோழவாணப் பேரரையன் இவ்வாணிச்சுரர் கோயிலுக்கு ஒளி விளக்கு அமைக்க ஏற்பாடு செய்தான் போலும். பின் இக்கோயில் குலோத்துங்கனால் செப்பம் செய்யப்பெற்று நான்கு நூற்ருண்டுகள் சிறக்க இருந்தது.