பக்கம்:வரலாற்றுப் புதையல்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 இவை எல்லாம் கனவாகிக் கழிய இன்று சிறு ஒதுக்கிட மாகக் கேட்பாரற்று இக்கோயில் இருப்பதை எண்ணி வருந்த வேண்டியுள்ளது. - அம்பலவாணர் கோயில் இன்று சிறந்துள்ளது. பெருங் கோயில்களில் நடைபெறும் அத்தனை விழாக்களும் நித்திய பூசைகளும் (மூன்று காலம்) குறைவின்றி நடைபெறு கின்றன. சித்திரையில் நடைபெறுகின்ற பெருவிழாவாகிய * பிரம்மோற்சவம் பல ஆண்டுகளுக்கு முன்பே நிறுத்தப் பெற்றது. ஆண்டில் பல ஆயிரங்களுக்கு மேல் வருவாயின்ை உடைய இக்கோயில் இன்னும் நன்கு பராமரிக்க வேண்டிய நிலையில் உள்ளது. இனி, இக்கோயிலுக்கும் ஊருக்கும் தில்லைக்கும் அம்பலத்துக்கும் உள்ள தொடர்பினை எண்ணிப் பார்க்க லாம். அம்பலவாணரும் சிவகாமியும் இணைந்து தோற்ற மளிக்கும் இடங்கள் இவ்விரண்டுமாகும். அம்பலம், வான் என்ற இரு சொற்களும் தில்லை இறைவனைச் சுற்றி அமைந்த வெட்ட வெளியினைக் குறிப்பனவாகும். தில்லை அம்பலமாகிய ஆகாய த் தலத்தினைப்போன்றே இங்கும் ஊரும் கோயிலும் அந்த அழகிய பெயர்களைக் கொண்டு விளங்குகின்றன. இவ்வூர்க் கோயிலின் மூலத் தானத்தைச் சுற்றி, ஆகாய நிலை உள்ளமையினைச் சுட்ட ஆறடி அளவில் பரந்த திறந்த வெளியிருந்தது. ஆனால் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்தான் (பலர் அதில் தெரியாமல் வீழ்ந்து விடுகிறார்கள் என்ற காரணத்தால்) மூடப் பெற்றது. எனவே தில்லையைப் போன்றே இதுவும் பஞ்ச பூதங்களில் ஒன்றாகிய-பிற பூதங்களை உள்ளடக்கிய ஆகாயத்தலமாக விளங்கிற்று- விளங்குகிறது. வான் பாக்கம் என்ற பெயரும் அதை வலியுறுத்துவதாகும். இங்குள்ள மூலவருக்குமட்டுமின்றி நடராசருக்கும் தனிச்சிறப்பு உண்டு. தில்லையில் நடக்கும் ஆறு பெரிய அபிடேகங்களைப்போன்றே இங்கும் உரிய நாட்களில் அபிடேகம் நடைபெறும். தில்லையில் அம்பலவனை முன்