பக்கம்:வரலாற்றுப் புதையல்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17 மண்டபத்தும் ஆயிரக்கால் மண்டபத்தும் எழுந்தருளி வித்து திருமஞ்சனம் செய்வது போன்றே இங்கும் வேறு தனி மண்டபத்தும் திருவாதிரையில் பெருமண்டபத்தும் வைத்துத் திருமஞ்சனம் செய்வது இன்றும் வழக்கமாக உள்ளது. திருவாதிரை நாளில் நடராசர்தம் அபிடேகம் விடியல் நான்கு மணி அளவில் முடிய, அடுத்து அவரை வெள்ளுடை யிலும், பின் செவ்வுடையிலும் அலங்கரித்து, கோயில்ை வலம் வந்து, வெட்ட வெளியில் நிறுத்தி வழிபாடாற்றும் வழக்கம் இன்றும் உண்டு. அதன் பொருளினை நான் என் இளமையில் எண்ணிப் பார்க்க இயலாவிடினும் பின் எண்ணிக் கணக்கிட்டதுண்டு. ஆம்! வான வெளியாய்மோனத் தொளியாய்- அப்பாலுக் கப்பாலாய் உள்ள ஆண்டவன் பெருநிலையினை முதலில் வெள்ளுடையில் வணங்கவும் பின் அதே ஆண்டவன் உலக உயிர்கள் உய்யும் பொருட்டு, ஆடல் இயற்றி சிவன் எனும் நாமம் தனக்கே உரிய செம்மேனி அம்மானாய்க் காட்சியளிக்கும் பான்மை யினைச் செவ்வுடையில் வணங்கவும் இந்த முறையினிைவழிபாட்டினை ஏற்பாடு செய்துள்ளார்கள் என உண்ர்ந் தேன். அம்பலவன் தன்மையின்ன இவ்வழிபாடு நின்கு காட்டுகிறதன்றோ! அத் திருவாதிரை நாளில் தில்லையைப் போன்றே இவ்வூரும் விழாக்கோலம் பூண்டு நிற்கும். அனைவரும் தூய உடையும் உள்ளமும் கொண்டவராய் வரிசை வரிசையாகக் கோயிலுக்குச் சென்று வழிபாடாற்றுவதோடு, தத்தம் தெருவுதொறும் அம்மையையும் அப்பரையும் நிறுத்தி மண்டகப்படி செய்யும் காட்சி இன்றும் கண்கொள்ளாக் காட்சியேயாகும். திருவீதி உலாவின் இறுதியிலே, அம்மனைத் தெருவின் ஒரு கோடியிலும் இறைவனை மற்றொரு கோடியிலும் நிறுத்தி, அம்மன் ஊடல் கொண்டதாகக் காட்டி, இவ்வூடலைத் தீர்க்கும் வாயிலாக ஆலாலசுந்தரைக் கொண்டு நிறுத்தி, அவர் 2سسديجي