பக்கம்:வரலாற்றுப் புதையல்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 வழி உண்டல் நீங்கிய அம்மை அப்பர் இருவரும் திருச் கோயிலுக்கு எழுந்தருளும் காட்சியும் சிறந்ததாகும். சுந்தர்ருக்கு இறைவன் தூது சென்றதைத் தவறு எனக் கர்ட்டிய ஒரு நாயனாருக்கு இறைவனே பதில் தந்ததாகப் பெரியபுராணம் கூறுகின்றது. அப் பெரியபுராணம் இயற்றிய சேக்கிழார்பிற்ந்த அதே தொண்டை நாட்டில், அவர் மரபினர் இன்றும் சிறக்க வாழும் அங்கம்பாக்கத்தில், இறைவன்னத் தூது அனுப்பியதற்குக் கழுவாயாகச் சுந்தரர் தாமே தூது சென்று அம்மைய்ப்பரை இண்ைத்து வைக்கும் நிலை சிறக்க அமைகின்றது. இக்காட்சி ஒப்பற்ற உயரிய நற்காட்சியாகும். இனி, ஒருவகையில் இவ்வூரினைத் தில்லையொடு இணைக்கும் செவிவழிக் கதையும் உண்டு. தில்லையில் வாழ்ந்த அந்தனர் ஒருவர் மறைய அவர் அஸ்தி: யை எடுத்துக்கொண்டு, அவர் மகனார் காசிக்குப் புறப் பட்டாராம். வழியில் ஒருநாள் பொழுது சாய, இவ்வூரில் தங்கினாராம். இரவு கழிந்து மறுநாள் காலையில் கண் விழித்துப் பார்த்தபொழுது, அவருக்கு ஒர் அதிசயம் காத் திருந்ததாம். ஆம்! புதுப்பானையில் இருந்த எலும்புகள் அனைத்தும் பூக்களாக மாறி மணம்வீசத் தொடங்கிய தாம். அதுமட்டுமன்றி, அவர் அதிசய உளத்தொடு, மேலே சென்று இவ்வூர் எல்லையைக் கடக்க, அப் பூக்களும் பிறவும் மறைந்தனவாம். இவை அனைத்தும் இவ்வூர்த் தல விசேடமே என அனைவரும் போற்றிப் புகழ்ந்தார் களாம். தில்லை அந்தணரும் உடனே மேலே செல்வதை நிறுத்தி; இத்தலத்தையே காசியாகக் கருதி இங்கேயே தந்தையாருக்குரிய கடனை முடித்ததோடு தில்லையில் உள்ள அம்பலவாணரையும் சிவகாமி அம்மையையும் இவ்வூரிலே தாபித்து வழிபட்டு வந்தாராம். அங்கம் (எலும்பு) பூத்ததனால் இவ்வூர் அங்கம்பூத்துார் என வழங்கப் பெற்று பின் பக்கத்தில் பல பாக்கங்கள் உள்ளமை ப்ேiன்று.இதுவும். அங்கம்பாக்கம்..என மாறிற்று என்று