பக்கம்:வரலாற்றுப் புதையல்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19. கிறுவர். வான்ப்ாக்கம் அங்கம்ப்ர்க்கத்தோடு இண்ைந்த காலமும் வாணிஸ்வரர் அம்பல்வாணிஸ்வரரான கர்லமும் இதை 'ஒட்டியதாக இருக்கலாம் எனக் கொள்ள இட முண்டாகின்றது. மேலும் இவ்வாய்மொழியினை வெறும் கதையாகக் கொண்ட்ாலும், இதன் வழியே தில்லைக்கும் இவ்வூருக்கும் உள்ள தொடர்பு மறுக்க முடியாததாகும். நான் முன்னரே காட்டியபடி, இதனாலேயே வடமொழி வாணர்கள் தம் தோத்திர முடிவில் இங்கே அம்பல வாணரை, சிவகாமி அம்பாள் சமேத சிதம்பரேஸ்வரர்' என்றே கூறி வழிபடு நெறியினை இன்றும் காணலாம். o, மேலும் மற்றொரு கதை வழங்கி வந்துள்ளது. இங்குள்ள நடராசர் சிலையே சிதம்பரம் கோயிலிலிருந்தேயாருக்கும் தெரியாமல் கொண்டுவரப்பெற்றது என்பர். சிதம்பரம் திருக்கோயிலுக்கு எனச் செய்த இச்சிலையினை இவ்வூர் வேளாளர்கள் பற்றின் காரணமாக எப்படியோ பற்றிக்கொண்டுவர, பிறகு தில்லையில் வேறு சிலை செய்யப் பெற்றத்ாகவும் கூறுவர். இவை அனைத்தும் உண்மையோ இல்லையேர் - இவற்றால் இரு ஊர்களுக்கும் உள்ள தொடர்பு தெளிவாகின்றது உண்மையாகும். - - அம்பலவாண்ர், சிவகாமி, நடராசர் ஆகிய விக்கிரகங் கள் அழகிய வடிவினைக் கொண்டுள்ளன. மங்காத பொன்னார்மேனியுடன் இன்றும் என்றும் காட்சியளிக்கும். இத்திருவுருவங்களை எப்போதும் கண்டுகொண்டிருக்க வேண்டும் என்ற் உணர்வு, காணுவோர் யாருக்கும் தோன்றும் என்பது துணிபு. i இவ்வூர் முன்பு தொண்டைமண்டலத்து ஊற்றுக் காட்டுக் கோட்டத்தைச் சேர்ந்திருந்தது. பின் களத்தூர்க் கோட்டத்தைச் சார்ந்த குறும்பறை நாட்டு உட்பிரிவில் இருந்தது. செங்கற்பட்டு மாவட்டம் அமைத்தபோதும், (ஆங்கிலேயர் ஆட்சியில்) இது முதலில் மதுராந்தகம் வட்டத்தில் இருந்து பின், காஞ்சிபுரம் வட்டத்திற்கு, மாற்றப்பெற்று இன்றள்வும் அவ்வட்டத்தில் உள்ளது.