பக்கம்:வரலாற்றுப் புதையல்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 வருகின்றது. இவ்வூரில் நான் பிறவாதமுன் - என் அன்னையார் வள்ளியம்மாள் பிறந்த ஆண்டில் வெளியான நூல் இது. இதன் வழி இவ்வூரின் வளமும் மக்கள் நலமும் பிற சிறப்புக்களும் அறிய இயலும். இந்தப் பதிப்பில் சீர் மட்டும் தனியாகப் பிரிக்கப் பெற்று (சந்திகள் பிரிக்காமல்மூலத்தின் படியே) நூல் அச்சிடப்பெற்றுள்ளது. முதற் பதிப்பின் முன்பக்கமும் சாற்றுக்கவிகளும் அப்படியே படி எடுத்து அச்சிடப் பெற்றுள்ளன. இந்நூலின் பிற்பகுதியில் அமைந்த அங்கபுரத்து அம்பலவாண மாலையில் இவ்வூரில் வாழ்ந்த சைவ வேளாளர் குலத்தவர் பண்பும் இயற்கை எழிலும் மரபும் நன்கு காட்டப் பெறுகின்றன. சத்தியாய்ச் சிவமாய் என்ற முதுமொழிப்படி, சத்தியாகிய சிவகாமிக்கே எல்லர் ஏற்றங்களும் தரப்பெற்று, அச்சத்தியோடு பொருந்திய அம்பலவனை இறுதியில் பாடல்கள் போற்றுகின்றன இத்தலத்தினை அன்போடு பூசிப்பவர் எல்லாப் பேறு களையும் - பெற்றனர் - பெறுவர் எ ன் பது உண்மை யாகும். இந்த இறைவனை வழிபடின் எண்ணியது கைகூடும் என்பதை நேரில் அனுபவித்தவன் நான். இக்கோயிலுக்குச் சென்னையில் வீடு வாங்க நேர்ந்தபோது உண்டான இடர்ப்பாடுகளும் இந்த இறைவனையும் இறைவியையும் நெஞ்சால் நீடு நினைந்து போற்றியதால் அவை நீங்கிய நிலைகளும் பெருங்கதையாகும். இங்கே வி வ ரி க் க. இடமில்லை. என் இளமைக் காலத்தில் இந்நூலைக் கண்டிருக் கிறேனாயினும் இதுபற்றி நான் அதிகம் எண்ணியதில்லை. பிற்காலத்தே இதை எப்படியும் மறு பதிப்பாக அச்சிட வேண்டும் என்ற உணர்வு எழுந்தது. அந்த உணர்வின் வ்ழிய்ே இன்று இந்நூல் வெளிவருகின்றது. அருட்சிவகாமி