பக்கம்:வருங்கால மானிட சமுதாயம்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

99



பொதுவுடைமையும் மக்களின் பூரிப்பும்


மாந்த மதிப்பார்ந்த மேன்மைக்கான முன் தேவை என்ன? மாந்தனுக்கு மகிழ்வின்பத்தைக் கொண்டு வருவது எது?

எந்த ஒருவரும் தனது படைப்பாற்றல் திறமைகளை பெருக்கம் செய்வதினின்றும் தடுக்கப் பட்டிருப்பாரேயாயின், அந்த ஆளால் பூரிப்பாக இருக்க முடியாது. ஒருவரது அகப்பண்பை பெருக்கம் செய்து கொள்வதற்கான வாய்ப்பு சமுதாய அமைப்பின் தன்மையையே சார்ந்திருக்கிறது. இந்த சிக்கல் சமுதாயத்தின் ஒவ்வோர் உறுப்பினரையும் பொறுத்த சிக்கலாயின், பின்னர் மாந்த வளர்ச்சி சிக்கலானது, மாந்தனின் மதிப்பாண்மையையும் மகிழ்ச்சியையும் பற்றிய சிக்கலானது, மாந்த அகப் பண்புக்கொரு முட்டுக்கட்டையாக இருக்கும் சமுதாயக் காரணங்களை ஒழித்துக் கட்டும் சிக்கலாகி விடுகிறது.

முதலாளிய வகுப்பு அனைவருக்கும் உரிமையும், சமன்மையும், மகிழ்ச்சியும் வழங்குவதாக முழக்கமிட்டுக் கொண்டுதான்் அதிகாரத்துக்கு வந்து சேர்ந்தது. இந்த வாக்குறுதிகளால் பயன் பெற்றவர்களோ வெகு சிலர்தாம் இன்றோ அகப்பண்பை அழித்தொழிப்பதைப்பற்றி முதன் முதல் வாயைத் திறப்பவர்கள் முதலாளியக் கோட்பாட்டாளர்கள்தான்.