பக்கம்:வருங்கால மானிட சமுதாயம்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100

வருங்கால மானிட சமுதாயம்



முதலாளியத்தின் வளர்ச்சிதான்் அகப் பண்பை அடக்கி ஒடுக்கும் அதன் ஈவிரக்கமற்ற அடக்கு முறையைக் கொண்டு வந்த தெனினும், அவர்கள் இந்த நிகழ்ச்சிப் போக்கை முதலாளியத்தின் இயல்போடு பிணைப்பதில்லை. மேற்கு செருமனி சமூகவியல் அறிஞரான பிரீட்மனின் கருத்துப்படி, மாந்தன் பால்லோவின் ஆய்வுகளில் இடம் பெற்ற நாய்க்கு இணையானவன் - அதாவது அந்த நாய் உமிழ் நீரை வெளிக் கொணரவும், உணர்ச்சி மிகுதி அல்லது அமைதி கொண்ட நிலையை எய்தவும் வேண்டுமெனில் அது ஒர் அழற்சிப் பொருளால் துண்டிவிடப் பட்டது இத்தாலியத் தத்துவ வாளர் சக்கா முதலாளிய விடுதலைக்கும் பிராமித்தியூசைப் பிணைத்திருந்த விலங்குகளும் ஒர் ஒப்புவமை காண்கிறார்.

பொருள்கள் மாந்தனை வயப்படுத்தியுள்ளன. ஒரு வண்டியோட்டி "திசை திருப்பும் சகடத்தின் செய"லாகவும் வான்கோழியைத் தின்னும் மாந்தன்"வான் கோழியின் செய"லாகவும் மாறி விடுவதாக மேற்கு செருமன் சமூகவியல் அறிஞர் பிரேயர் கூறுகிறார். உண்மையில் ஒளிவு மறைவற்ற வாய்மொழி, இது! இதனைச் சமுதாய வளர்ச்சிபற்றிய அறிவியல்க் கொள்கை வெகு காலத்துக்கு முன்பே நிறுவிக் காட்டி விட்டது என்பதுதான்் இதிலுள்ள ஒரே செய்தி, அகப்பண்பை அடிமைப் படுத்தியதான்து சமுதாய உறவுகளால் ஏற்பட்டதன்று, மாறாக முதலாளிய சமுதாய உறவுகளின் தவிர்க்கொணாத விளைவாகத்தான்் நேர்ந்தது என்பதைப் பொருள் முதல் வாத வரலாற்று விளக்கம் விளக்கியுள்ளது. என்பதுதான்் இதில் உள்ள ஒரே வேறுபாடு.

ஆனால் முதலாளியத்தின் கீழ் "பொருள்கள் மனிதனை ஆள்கின்றன" என்ற உண்மை முதன்மையன்று. முதன்மையானது என்னவெனில் முதலாளியம் உழைப்பையும் திறமையையும் அழகையும் அங்காடிச்-