பக்கம்:வருங்கால மானிட சமுதாயம்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

103


பொதுவுடைமை அகப் பண்பை ஒரே மட்டமாக ஆக்குவதையும் விலக்கிவிடுகிறது. கம்யூனிசம் மனிதனை மாந்தப் பண்புறச் செய்கிறது.

இவை அனைத்தும் தாமாவே வந்துவிடாது என்பது உண்மை. ஆனால், பொதுவுடைமையின் தொடங்கக் கட்டத்திலும் கூட, சமன்மை ஊழியத்திலும் கூட, அதாவது உழைப்பனது உயிர் வாழ்க்கைக்கான கருவியாகவே இன்னும் இருந்து வருகின்ற பொழுதே, பயனிட்டுத் துறையில் இன்னும் சமத்துவத்தைப் முழு நிறைவாகக் கொண்டு வர இயலாதிருக்கும் பொழுதே, நகர்ப் புறத்துக்கம் சிற்றுார்ப்புறத்துக்கும் உள்ள முதன்மை வேற்றுமைகளும், உடல் உழைப்புக்கும் மூளை உழைப்புக்கும் உள்ள சிறப்பு வேற்றுமைகளும் இன்னும் இருந்து வரும் கால கட்டத்திலேயே, பொதுவுடைமைகளும் அனைத்து மக்களுக்கும் மகிழ்வின்ப வாழ்வுக்கான முதல் அடிப்படையை வழங்குகின்றது. ஆதாவது தமது உழைப்பும் வாழ்க்கையும் சமுதாயத்துக்குத் தேவைப்படுகின்றன என்பதை ஒருவர் உணர்ந்து மகிழும் பூரிப்பை வழங்குகின்றது. தாம் ஒரு தேவையான நபர் என்று ஒருவர் உணர்வதே அவருக்கு மிகப் பெரும் மகிழ்ச்சியையும் முழு நிறைபேரின்பத்தையும் அளிக்கிறது.

யார்? எவர்? என்றும் கையேடுகள் பல முதலாளிய நாடுகளில் புகழ்பெற்றவை. அவை தன்னல முதலாளிகள், பாங்கி டைரக்டர்கள், ராஜ தந்திரிகள், செல்வக் குடும்பத்தில் பிறந்த பெருமான்கள் ஆகியோருக்கு நல்ல விளம்பரமாகும்.

சமன்மை நாடுகளில் ஒருவரின் சமூக நிலைப்பாடு அவரது செல்வத்தையோ, மரபையோ, தொழிலையோ, கொண்டு தீர்மானிக்கப்படுவதில்லை. அவர் ஒரு தொழிலாளியாயினும், உழவராயினும், மருத்துவராயினும்,எழுத்தாளராயினும், விண்வெளி வீரராயினும்,