பக்கம்:வருங்கால மானிட சமுதாயம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

வருங்கால மானிட சமுதாயம்


கிழக்காசியாவில் போர் அறிக்கை செய்யாத கொடிய போரினை அமெரிக்கா நடத்தி வருகிறது. தென் வியத்நாமில் அது நஞ்சினைப் பயன்படுத்தும் அளவுக்குச் செல்கிறது; வட வியத்நாமிலோ அமைதியான நகரங்களையும் சிற்றுார்களையும் விலங்காண்டித் தனமாகக் குண்டு வீசி அழிக்கிறது கோடானு கோடி மக்கள் நட்பமைதி என்றால் என்ன என்பதையே மறந்து போயிருக்கின்றனர்.

போர்களைக் கட்டவிழ்த்து விடுவதன் மூலமும், ஏனைய மக்களின் உள்நாட்டு நடவடிக்கைகளில் தலையிடுவதன் மூலமும், வல்லாதிக்கவாதிகள் வரலாற்றின் முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்த முனைகின்றனர். ஆனால் முன்னேற்றமோ பின்வாங்க முடியாதது. உலகில் அரும்பெரும் சமுதாய மாறுதல்கள் நிகழ்ந்து வருகின்றன. வல்லாதிக்க, குடியேற்ற அமைப்பு தனது இறுதி நிலையை எட்டிக் கொண்டிருக்கிறது. ஆப்பிரிக்கா முதலிய கண்டங்களின் நானில் வரை படத்தைப் பார்த்தால்,இப்போது பிரிட்டன், இசுபெயின், போர்த்துகல் முதலியவற்றின் மரபு வழியான வண்ணங்கள் சிறு சிறு திட்டுகளாகத்தான் தென்படுகின்றன. 1919இல் குடியேற்ற அரைக்குடியேற்ற நாடுகள் நிலப்பரப்பில் முக்கால் பகுதியில் இருந்தன; இப்போதோ அவை பதினோறில் ஒரு பங்குக்கு மேல் இல்லை.

உலகின் அரசியல் வரை படத்தில் மேன்மேலும் புதிய வண்ணங்கள் - உரிமை வண்ணங்கள் தோன்றிய வண்ணம் உள்ளன.

எனினும் அடிமைத்தனம் இல்லாததோர் உலகை எட்டிப்பிடிக்க இன்னும் நெடுந்தூரம் சென்றாக வேண்டும். இன்றும்கூட, குடியேற்ற நாடுகளிலுள்ள சுமார் 5 கோடி மக்களுக்கு அடிப்படைவாழ்வுரிமைகள்