பக்கம்:வருங்கால மானிட சமுதாயம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

வருங்கால மானிட சமுதாயம்


முன்னாளில் இருந்தவையாயினும் அவற்றின் இன்றைய விரைவான முன்னேற்றமானது, ஆக்கத்தின் அறிவிலும் சரி, வாழ்க்கை நிலையிலும் சரி, மிகவும் முன்னேற்றம் எய்திய முதலாளித்துவ நாடுகளையும் கூட அவை விஞ்சி மிஞ்சி முன்னேறி விடக் கூடிய காலம் தூரத்தில் இல்லை என்று சொல்லக் கூடிய வகையில் விளங்குகின்றது.

பொருளியல் வளர்ச்சியில் உயர்ந்த விரைவு முக்காட்டை நிலைநாட்டுவதன் மூலமும், தேய வருமானத்தை மக்களுக்காகப் பயன்படுத்துவதன் மூலமும்,வாழ்க்கை நிலையில் படிப்படியான உயர்வு ஏற்படுவதையும் சலக உழைக்கும் மக்களின் பொருளாயத ஆன்மீகத் தேவைகளைப் முழுமையாக நிறைவு செய்வதையும் சமன்மையம் உறுதி செய்கிறது.

நிலையான முதலாளியம் பற்றிய தனியரசாட்சிக் கட்டுக்கதை காலத்தின், கண்கண்ட நடைமுறையின் ஆய்வில் நிலைத்திருக்க முடியாது. சமன்மை உலகம் தோன்றி வலிமை பெற்ற பிறகும், வல்லாதிக்க நாடுகள் முற்றுகை, தலையீடு, போர்கள் என்ற முட்டுக் கட்டைகள் மூலம் காட்டிய பலத்த எதிர்ப்புகளுக்கு இடையிலும், சமன்மை உலகம் வெற்றியுடன் வளர்ந்து வருகின்ற பிறகும் கூட நிலையான முதலாளியம் பற்றி எப்படிப் பேச முடியும்?

பல இளம் தேசிய அரசுகள் முதலாளிய வளர்ச்சிப் பாதையைக் கைவிட்டு வருவதும், அவற்றில் சில (கூட்டரபுக் குடியரசு, மாலி, பர்மா மற்றும் பிற நாடுகள்) சமன்மைப் பாதையை உணர்வுடன் தேர்ந்தெடுத்திருப்பதும் குறிப்பிடத் தக்கதாகும்.

முதலாளிய நாடுகளிலும் கூட, வலிமை வாய்ந்த கம்யூனிச இயக்கம் நாளுக்குநாள் வலுப் பெற்று வருகிறது. இன்று உலகில் 89 பொதுவுடைமைக் கட்சிகள் உள்ளன; அவற்றில் சுமார் 5 கோடி உறுப்பினர்கள் உள்ளனர்.