பக்கம்:வருங்கால மானிட சமுதாயம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

வருங்கால மானிட சமுதாயம்


காலமாகக் கற்பனை செய்தார். ஒரு வேளை மக்கள் உழைக்க நேர்ந்த போதிலும் அந்த உழைப்பு அவர்கள் தமக்குள் அமைதியோடு எதிரிடை எதிர் கொண்டு உழைத்த மகிழ்ச்சியான காரியமாகவே இருந்தது. உரிமை, நட்புறவு, ஒப்புறவு உதவி ஆகியவை அக்காலத்தின் ஒழுக்க முறை இருந்தன. அத்தகைய காலத்தை மட்டும் திரும்பக் கொண்டுவர முடிந்தால் என்று கனவு கண்டார் அக் கவிஞர்.

ஆனால் அக் காலத்தை எவ்வாறு திரும்பக் கொண்டு. வர முடியும்? ஒடுக்குமுறைச் சுமையைத் துக்கியெறிய முனைந்த அனைத்து முயற்சிகளும் ஒடுக்கப்பட்டவர்களுக்குத் தோல்வியாகவே முடிந்தன. எதிர்காலம் அவர்களுக்கு எவ்வித நல்ல வாய்ப்புகளையும், இனங்காட்டவில்லை. எனவே தமது கனவுகளில்தான் மக்கள் அந்தப் "பொற்கால"த்தைத் திரும்ப கொண்டுவர முடியும் எனறே தோன்றியது.

இதனால், மக்கள் என்ன காரணத்தாலோ இழந்து விட்ட ஒரு வையகத் துறக்கத்தைப்பற்றிக் கற்பனைப் பாடல்கள் இயற்றப்பட்டன. கிறித்தவர்களின் துய மறையான விவிலிய நூலின் புதிய ஏற்பாட்டில் தொல்பழங் காலக் பொதுவுடைமைக்காக ஏங்கித் தலிக்கும் பகுதிகள் - சிறு பிள்ளைத்தனமான பகுதிகள் தான் - அடங்கியுள்ளன. அவற்றில் நம்பிக்கை உண்டு: ஆனால் தைரியம் கிடையாது. பழங்கால கிறித்தவ இலக்கியங்களில் ஒன்றான அபோகலிப்சே இறை காப்பாளரான ஏசு கிருத்துவின் வருகையை முன் கூட்டியே கூறுகிறது. அவர் மக்களை இருளிலிருந்து விடுவித்து வழிகாட்டுவார் என்றும், உலகின் மீது ஆயிரம் ஆண்டு காலம் சமன்மையும் அறமும் நிறைந்த ஆட்சியை நிறுவுவார் என்றும் அந் நூல் கூறுகின்றது.

ஆனால் காலம் செல்லச்செல்ல, மதமானது இந்த அறப்போரை விண்ணகப் பேரரசாக மாற்றியது; இந்த