பக்கம்:வருங்கால மானிட சமுதாயம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

17


விண்ணகப் பேரரசியம் பற்றாவலர்களுக்கு இறப்புக்குப் பின்னர் கிட்டக்கூடிய பரிசாக மாறியது இதற்கிடையில் திருச்சபையோ நானிலத்தில் மீது நிலவிய சம்மை இன்மையும் ஒடுக்குமுறையையும் சுரண்டலையும் தேவன் விதித்த வாழ்க்கை முறை என வெளிப்படுத்திற்று விண்ணகப் பேரரசும்கூட, தான் பெற்றிருந்த தொன்மை பொதுவுடைமை சாயல்களைப் படிப்படியாக இழந்து விட்டது மண்ணுக்கு அப்பாலுள்ள விண்ணக வாழ்க்கையும் பணக்காரர்களின் வாழ்க்கையை யொத்த வாழ்க்கையாக, சோம்பேறித்தனமும் இன்பம் மலிந்த வாழ்கையாக ஆக்கப் பட்டது.

ஆனால் மக்களோ இந்த உலகிலேயே சமன்மையையும், அறமுறையையும் பொருளியல் நல் வாழ்வையும் பெறுவதைப் பற்றிச் சிந்தித்து வந்தனர் அவர்கள் உழைப்பைக் கண்டு அஞ்ச வில்லை மாந்த இனத்தின் மூதாதையர்கள் சோம்பியிருக்கவில்லை என்பதை நினைவு கூர்ந்தனர் ஆதாம் நிலத்தைத் தோண்டினான்; ஏவாள் நூல் நூற்றாள்.

உலகில் அறமும் சமன்மையும் நிலவும் பேரரசு பற்றி பழைய கிறித்தவக் கருத்தை வலியுறுத்த ஆயிரம் ஆண்டுக் காலத்துக்கும் மேலாகப் பல இயக்கங்கள் தோன்றின் திருச்சபையால் வேதப் புரட்டர்கள் எனப் பழிதுாற்றப் பட்ட இவ் இயக்கங்களின் தலைவர்கள் தனியார் உடைமை தீவினையான தென்று கற்பித்தனர்; நிலத்திலும் உடைமையிலும் சம உரிமைகள் வேண்டு மென்பதை ஆதரித்தனர் 16ஆம் நூற்றாண்டுத் தொடக்கததில் செருமனியில் நடந்த உழவர்களது போரின் தலைவரான தாமசு முன்செர் தனியார் உடைமையின் முறையின்மையை எடுத்துக் கூறினார் எந்த வகையான வகுப்பு வேறுபாடுகளோ, தனியார் உடைமையோ, பகை மனம் கொண்ட அரசாங்கமோ இல்லாத ஒரு சமுதாய

வ மா - 2