பக்கம்:வருங்கால மானிட சமுதாயம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

வருங்கால மானிட சமுதாயம்


அமைப்பை நிறுவுதற்கான திட்டம் ஒன்றையும் உருவாக்கினார்.

அறமும் சமன்மையும் நிலவும் தெய்வப் பேரரசு கடந்து போன அந்தக் காலத்து மக்களின் கனவுபொதுவுடைமையை ஒரளவு ஒத்திருந்தது என்பது உண்மை. எனினும் தெளிவற்ற வகையில்தான் ஒத்திருந்தது. ஏனெனில் வளர்ச்சி குன்றிய பொருளியலில் எல்லோருக்கும் நல்வாழ்வை உறுதிப் படுத்த முடியாது; அத்தகைய நிலைமைகளில் சமன்மை என்பது ஏழைகளின் சமன்மையாகத்தான் இருக்க முடியும். மேலும் அதனை எய்திய போதிலும் கூட (இத்தகைய முயற்சிகளும் பல்வேறு சிறிய மத சமூகங்களில் மேற்கொள்ளப்பட்டன) அந்தச் சமன்மை வாழ்வு குறைநாளில் தான் முடிந்தது.

மக்களின் கனவு என்ன வாயிற்று? முதலில் அது "பொற்கால"மாக இருந்தது; அதுவோ முற்றிலும் கடந்த காலத்தைச் சேர்ந்ததாகி விட்டது. பின்னர் அது மண்ணகத்துர்க்கமாயிற்று. இதுவோ முற்றிலும் எல்லை காண முடியாத எதிர்காலத்தைச் சேர்ந்ததாகி விட்டது. அறமும் சமன்மையும் நிலவும் பேரரசு நிலத்தில் தானாகவே நிறுவப்பட மாட்டாது என்பதை மக்கள் மேன்மேலும் தெள்ளத் தெளிவாக உணரத் தொடங்கினர்.

அவர்கள் அதனை எவ்வாறு எய்துவது? அத்தகைய கனவுகளிலிருந்து முளைத் தெழுந்ததே

உண்மையில் அது தொடக்கத்தில் பல இலக்கியல் உலகுகளாக இல்ல; ஒரே கற்பனை உலகமாகத்தான் இருந்தது. கருத்தியல் உலகம் - என்னும் புதிய இலக்கியல் நாடும், பொது நலங் கருதும் சிறந்த அரசும் ஆற்றும் பயனுள்ள இன்பமான பணி - ஆங்கிலேய உட்படு கருமத்தலைவரும் மாபெரும் மனிதநலநாட்டவரான சர் தாமசு மூர் 1516-ல் எழுதிய தமது புகழ்பெற்ற நூலுக்கு இவ்வாறுதான் தலைப்புக் கொடுத்திருந்தார்.