பக்கம்:வருங்கால மானிட சமுதாயம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

19



அக் காலத்தில் இங்கிலாந்தில் ஆட்டுக் கம்பளிப் பொருள்களின் பெருக்க வளர்ச்சியின் விளைவாக மேய்ச்சலுக்காக வேலி கட்டி வைத்திருந்த தமது நிலங்களிலிருந்து உழவர்கள் வெளியேற்றப்பட்டனர். இதனால் அவர்கள் கட்டாய தண்டனை கிட்டக் கூடிய இடர் இருப்பினும் கூட, அவர்கள் வேறு வழியின்றி இரந்துண்டு வாழ்வதற்காக நாடெங்கனும் அலைந்து திரிந்தனர்.

தாமசு மூர் தமது காலத்துச் சமுதாயத்தைக் அறச்சியற்றத்தோடு கண்டித்தார். அவர் இவ்வாறு எழுதினார்: இயல்பாகவே அறிவார்ந்த தன்மையும் கட்டுக்கு எளிதில் அடங்கியிருக்கும் பணம் கொண்ட உங்களது ஆடுகள் இப்போது மாந்தர்களையே தின்று வாழ்வதாகச் சொல்லலாம். அவை ஒழித்துக் கட்டுகின்றன."

" வேலைக்கு வர என்றுமில்லாத பெருவிருப்போடு முன்வந்த போதிலும்", அந்த மக்களை எவரும் வேலைக்கு வைத்துக் கொள்ளாத ஒரே குற்றத்தால் ஏழை எளிய மக்களைத் தூக்கு மேடைக்கு அனுப்பும் சமுதாயத்தை, உழைத்து வாழும் மக்களின் வாழ்க்கை ஆடு மாடுகளிலும் கடை கெட்ட பிழைப்பாய் இருக்க, ஒரு சில சோம்பேறிகளின் வாழ்க்கை மட்டும் ஆரவாரமாகவும் இம்பமாகவும் கழிந்து வந்த அந்தச் சமுதாயத்தை அவர் குற்றம் சாட்டினார்.

இந்தத் துயரத்துக்கும் முறையின்மை உரிய காரணம் எங்கிருந்தது? - இவ்வாறு தாமசு மூர் கேட்டார். தனியார் உடைமையில்தான் என்று விடைப்பு அளித்தார். மூரின் கருத்துப்படி, "ஒரு நாட்டில் சொத்துடைமை இருந்து வரும் வரையிலும், ஏதாவதோர் உரிமை ஆவணத்தின் மூலம் ஒவ்வொருவனும் தன்னால் முடிந்த மட்டிலும்