பக்கம்:வருங்கால மானிட சமுதாயம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

25



18ஆம் நூற்றாண்டில் புரட்சிக்கு முந்திய பிரான்சு நாட்டில் இருந்த கூட்டுடைமை கொள்கைகளின் ஆசிரியர்கள் மாந்த இயல்பிடமும் அறிவிடமும்தான் நேரடியாக முறையிட்டுக் கொண்டனர். ஆவணம் என்ற நூலின் ஆசிரியரான மெசுலியர் "அறிவின் இயல்பான ஒளியினால்" வழி காட்டப்பெற்று, ஒரு குறிக்கோள் சமுதாய அமைப்புப் பற்றிய சித்திரத்தை உருவாக்கினார்; அச்சமுதாயத்தில் பொது உடைமையும் அனைத்து மக்கள் உழைப்பும் உண்மையான உரிமையையும் சமன்மையும் மக்கள் எய்துவதற்கு உதவின. கம்யூனிச லட்சியத்தை எய்துவதற்குக் கல்வி மட்டும் போதாது. என்ற மெசுலியர் கருத்து. அவரது கொள்கைக்கு ஒரு தனித்தன்மை அளித்தது. புரட்சிகரமான வழியிலேயே தனியார் உடைமையையும் சுரண்டலையும் ஒழித்தாக வேண்டும் என்று அவர் கருதினார்.

மாப்லியின் கூற்றுப்படி, "இயற்கையின் ஆட்சி"க்கு அனைத்துத் தீமைகளுக்கும் முதல் காரணமான தனியார் உடைமையை ஒழிப்பது தேவையாக இருந்தது. பொதுச் சொத்து, சமன்மை, மிகச்சிறந்த குறிக்கோள்களின் பேரால் மக்களுக்கிடையே போட்டாபோட்டி, மக்களின் கைகளில் அனைத்து அதிகாரம் - இவையே மனித இயல்போடு இசைந்து வரும் சமுதாய உறவுகளாகும்; ஆனால் இவையெல்லாம் கடந்த கால செய்திகளாகிவிட்டன என்பதே மாப்லியின் கருத்து. எதிர்காலத்தைப் பொறுத்தவரையில் நிராசையே மாப்லியிடம் தென்பட்டது. தனியார் உடைமையால் சீரழிந்துபோன ஒரு சமுதாயத்தில் கம்யூனிச உறவுகளை நிறுவுவதே மிகக் கடினம் என்று அவர் கூறுகிறார்.

மாப்லியைப் போலவே, மோரெல்லியும் மாந்த இனத்தின் தொன்மை நிலையையே குறிக்கோள் வாழ்வாகக் கருதினார்; அதன் தொல்லைப்