பக்கம்:வருங்கால மானிட சமுதாயம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

27


ஆலைகளிலும் தொழிற்சாலைகளிலும் நிலவிய ஈவிரக்கமற்ற சுரண்டலும், அதைக் காட்டிலும் இழிவான வேலை இல்லாதத் திண்டாட்டமும் வறுமையும்தான் அங்கு அவர்களுக்குக காத்திருந்தன. அனைத்து மக்கள் உரிமை, சமன்மை, உடன்பிறப்பாண்மை ஆகிய முதலாளியப் புரட்சியின் வாக்குறுதிகளெல்லாம் மக்களைப் பொறுத்த வரையில் வெறும் ஆரவார சொற்களாகத் தான் இருந்தன.

முதலாளிய அமைப்பை செயின்ட் - சைமன், போரியர், ஓவென் ஆகியோர் கூர்மையாகத் திறனாய்ந்தனர். பிரஞ்சுப் புரட்சியானது மேட்டுக்குடி வகுப்பினர்க்கு எதிராக நடந்த போராட்டமாக மட்டுமல்லாமல் ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் நடந்த போராகவும் இருந்தது என்பதை செயின்ட் - சைமனே முதன் முதலில் இனம் கண்டவராவர். இந்தப் போராட்டம், இல்லாதவர்களைப் பொறுத்தவரை துயர விளைவையே விளைவித்தது. முதலாளியத்தை இறும்பூதுடன் திறனாய்வு செய்த திறனியான சார்லசு பெரியர், அரும்பெரும் செல்வத்திலிருந்து பிறந்த வறுமையைக்கொண்ட மக்கட் தொகையில் எட்டில் ஏழு பகுதியினரை, மீதமுள்ள எட்டில் ஒரு பகுதியினர் கொள்ளையடித்துப் பிழைக்கின்ற, புல்லுருவித் தனம் செழித்து வளர்கின்ற, தனியார் நலன்களுக்கும் பொது நலங்களுக்கும் உள்ள முரண்பாடுகள் வெளிப்பட்டு காண்போர் சிரிக்கின்ற "நாகரிக அமைப்பின்" தீமைகளைக் கண்டித்தார். இந்த நாகரிக சமுதாயத்தில் ஒவ்வொருவரும் வெகு மக்களோடு உள் நோக்கம் கொண்ட ஒரு போராட்டத்தை நடத்தும் நிலையிலேயே இருந்ததாக அவர் எழுதினார். அதாவது மருத்துவர் நிறைய நோயாளிகள் இருக்க வேண்டுமென்று விரும்பினார்; கட்டிடச் சிற்பியோ தனது நகரில் தீநேர்ச்சி ஏற்பட்டு கால்பங்கு நகரைச் சுட்டுக் கரியாக்கக் கூடாதா-