பக்கம்:வருங்கால மானிட சமுதாயம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

33


தன்னிச்சையான ஒப்பந்தம் செய்து கொள்ளும் அடிப்படையில் முழுமையான ஒற்றுமையைப் பெற்றிருக்கும். இந்தப் பலாங்கிகள் (2000 பேர்வரையிலும் கொண்ட) ஒப்புநோக்கில் குறைந்த உறுப்பினர் தொகையைக் கொண்ட பொருளாக்க பயனிட்டுக் கழகங்களாக ஒன்றுபட்டிருப்பர். அத்தகைய கூட்டுக் குடும்பத்தில் தொழிற் பட்டறைகள், படுக்கையறைகள், உணவருந்தும் அறைகள், பள்ளிக் கூடங்கள் முதலியவற்றைத் தன்னுட் கொண்ட ஒரு பெரிய கட்டிடத்தில் - பலாங்கிக் கூடத்தில் - வாழ்க்கை ஒருமுகப்படுத்தப் பட்டிருக்கும். உழைப்பைப் பலவிதமாக்குவதற்காக, மக்கள் தமது விருப்பம் போல் தொழில்களை மாற்றிக் கொள்வர். உழைப்பு மகிழ்வின் ஊற்றாக மாறிவிடும். பணக்காரர்களையும் உள்ளிட்ட அனைத்து மக்களும் அங்கு உழைப்பர் என்று போரியர் கூறியபோது அவர் இந்த உண்மையைத் தான்் பெரிதும் நம்பியிருந்தார்.

ஓவெனின் கொள்கை ஓரளவு வேறுபட்டதாகும். முதன் முதலாக அவரது "அறிவார்ந்த சமுதாய அமைப்பு" தனியார் வகுப்புகளற்ற அமைப்பாகும். அத்தகைய அடிப்படையில் எந்திரங்களின் அற்புதமான ஆற்றல் பெரு வளத்தை உறுதி செய்யும். புதிய சமுதாயத்தின் கருவான - சிறிய உழைப்பாளர் கூட்டுக் குடும்பத்தின் - ஒவ்வோர் உறுப்பினரும் தமக்குத் தேவையானதை யெல்லாம் பெறுவார். எந்திரத் தொழில் உழைப்புக்கும் பண்ணை உழைப்புக்கும், நகரத்துக்கும் சிற்றுார்க்கும் உள்ள வேற்றுமைகளோடு, உடல் உழைப்புக்கும் மூளை உழைப்புக்கும் உள்ள வேற்றுமையும் முற்றிலும் மறைந்துவிடும்.

ஓவெனது கருத்துகளின் மிகப்பெருந் தன்மை குறிப்பிடத் தக்கதாகும். எனினும் அதே நேரத்தில்

வ. மா.- 3