பக்கம்:வருங்கால மானிட சமுதாயம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

வருங்கால மானிட சமுதாயம்


கோட்பாடுகளின் அடிப்படையில் அமைக்கப்பட்டதோ, அந்தக் கோட்பாடுகளை போரியர் முழுமையாக ஒத்துக்கவில்லை என்பதும், காடென் அமைத்த பாமிலிசுடெரும் போரியரின் திட்டத்தில் ஒரு பகுதியைத்தான்் பின் பற்றியது என்பதும் தெரிந்த செய்தியே.

ஆனால், நாம் ஓவெனின் செயலாய்வினையைப் பார்ப்போம். அவர் 1824இல் அமெரிக்காவிலுள்ள இன்டியானாவில் "புதிய ஒற்றுமை" என்ற பெயரில் ஒரு சமன்மைக் குடியிருப்பை நிறுவினார். சுமார் 800 பேர் (ஒரு சிறந்த சமன்மைக் கூட்டுக் குடும்பத்தில் 800 முதல் 2000 பேர் வரை இருக்கலாம் என்ற ஓவெனின் கருத்துக் கேற்ற தொகைதான் இது). ஐரோப்பாவின் பல திசைகளிலிருந்தும் அமெரிக்காவுக்கு வந்து சேர்ந்தனர். (அவர்களில் அமெரிக்க நிலவியலின் தந்தையான வில்லியம் மக்லூர், அமெரிக்க உயிரியல் தந்தையான தாமசு சே, தச்சுப் நிலவியலாளரான த்ரூட், பிரஞ்சுத் தாவரவியல் அறிஞரான சார்லசு லெஸ்சூர் எட் அல் ஆகிய அறிவியலார்களின் வருகையை ஓவென் மிக இன்றியமையாததாக நம்பியிருந்தார்).

அந்தக் குடியிருப்புக்கு ஓகியோ ஆற்றின் கிளையாறு, கப்பல் போக்குவரவுக்கு உதவக் கூடியதுமான வபாசு ஆற்றின் கரையில் 30,000 காணி பரப்புள்ள நிலமும் இருந்தது. அந்த நிலத்தை விலை கொடுத்து வாங்கிய காலத்தில் , அதில் சாகுபடி செய்யப்பட்டு வந்த வயல்களும், பழத் தோட்டங்களும், கொடுமுந்திரித் தோட்டங்களும் இருந்தன; அத்துடன் தொழிற்பட்டறைகளும் குடியிருப்பு ஏந்துகளும் கூட இருந்தன.

"புதிய ஒற்றுமை" ஓவெனின் திட்டப்படி ஒழுங்கமைக்கப்பட்டது. 1825ஆம் ஆண்டு மே முதல் நாளன்று முழுநிறைவான கூட்டு குடும்பத்துக்கான