பக்கம்:வருங்கால மானிட சமுதாயம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

வருங்கால மானிட சமுதாயம்


சிறிது காலத்துக்கு முன்னர் இக்கேரியன் சமுதாயத்திலிருந்து வெளியேற்றப் பட்டுவிட்டார்.

"இளம் இக்கேரியா", "புதிய இக்கேரியன் மன்றம்", "இக்கேரியா நம்பிக்கை" ஸ்பெரன்ஜா என்பன போன்ற பற்பல பெயர்களில் சிறு இக்கேரியன் சமுதாயங்கள் பல்வேறு இடங்களில் இடையிடையே தோன்றின. இவற்றில் இக்கேரியா நம்பிக்கை கூலிக்கே ஆட்களை அமர்த்தியதன் மூலம் குழிமூடிப் போய் விட்டது; அதில் அதில் கம்யூனிச் முறை உண்மையில் முதலாளிய முறையாகி விட்டது.

வேறு பல ஆய்வுகளும் நடந்தன. அமெரிக்காவிலுள்ள புரூக் பார்ம் என்ற இடத்தில் செயின்ட்-சைமன் கூட்டுக் குடும்பம் ஒன்று உருவாக்கப்பட்டது: "சமுதாயப் ஆய்வுக்கான சிற்றுார்ச் சிறுவர்களின் இல்லம்" என்றழைக்கப்பட்டதும், பிரான்சில் 22 ஆண்டு காலம் இருந்து வந்ததுமான டாக்டர் சூவானின் கழகத்தைப் பேன்ற மோரியரிசுடுக் கழகங்களும் இருந்தன; மற்றும் (இசுகாத்லாந்திலிருந்த ஒரு பிசுடோன் கூட்டுக் குடும்பம், அயர்லாந்தில் கார்க்கிலிருந்த இரோலாகின் கூட்டுக் குடும்பம், இலண்டனிலும் ப்ர்மிங்காமிலும் ஓவென் உருவாக்கிய பண்ட மாற்றுச் சந்தைகள் ஆகிய) ஒவெனிஸ்டுக் கூட்டுக் குடும்பங்களும் இருந்தன.

இந்தச் செயல்முறை முயற்சிகள் அனைத்தும் படுதோல்வியிலேயே முடிவடைந்தன; இந்த முடிவு "உட்டோப்பியன்" சமன்மையின் முழு மாயைத் தன்மையைத்தான்் மெய்ப்பித்தது.

1726ஆம் ஆண்டில் இத்தாலிய மெய்யியல்வாணர் கியாம் பட்டிசுடர் விக்கோ "மனித நிலை மாந்தனில் காணப்படும் தெய்வக்கூறாகும்" என உறுதிப்படுத்தினார். இதன் மூலம் நிலை என்பது ஒரு தெய்வப் பிறவியால்