பக்கம்:வருங்கால மானிட சமுதாயம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

45




பொதுவுடைமையும் அறிவியலும்

கடலுக்குள் சென்று விழவேண்டுமென்று

ஆறுகளுக்கு எப்படித் தெரியும் ?


வற்றுக்கு தெரியாதுதான். அவை வெறுமனே சென்று விழுகின்றன. வோல்கா காசுபியன் கடலிலும், நைல் நடுநிலக் கட்டலிலும், இலேனா ஆறு ஆர்க்டிக் கடலிலும், அமெஸான் ஆறு அட்லாண்டிக் ஆழியிலும் சென்று விழுகின்றன. கங்கை, காவிரி, வங்கக் கடலிலும் அவை வெறுமனே விழுகின்றன; விழாமல் இருக்க அவற்றால் முடியாது.

ஏன் அப்படி? ஏனெனில் இயற்கையில் தென்படும் எல்லாப் பொருள்களும் தத்தம் தன்மைகளை-இயல்பு, இயற்பியல்,வேதியல், உயிரியல் தன்மைகளை, தமக்குரிய உறவுகளை, முறைகளைப் பெற்றுள்ளன. அவற்றை மக்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், அவை மாந்த உணர்வுக்கும் மனத்துக்கும் அப்பாற் பட்டுச் தன்னிச்சையாக இருந்து வருகின்றன. வேண்டுமானால், கிரேக்க நாட்டுப் பைரசும் அல்லது உரோமானிய நாட்டு செக்சுடசு எம்பிரிக்கசும் கூறியதுபோல், தான் அவற்றைச் சற்றேனும் பொருட்படுத்தவில்லை என்று யாரும் சொல்லிவிட்டுப் போகலாம். ஆனால் அவ்வாறு சொல்வதால் எதையும் மாற்றி விட முடியாது.