பக்கம்:வருங்கால மானிட சமுதாயம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

47


தான் அறிவியலில் இடம் பெறுகின்றன. ஏறக்குறைய நானூறு ஆண்டுகளுக்கு முன் உலகைப்பற்றிய பருதி மண்டலக் கருத்தை வகுத்துக் கூறிய கோப்பர்னிக்கஸின் நூலை வாட்டிகன் திருச்சபை தடை செய்து விட்டது. கோப்பர்னிக்கசின் தெய்வப் பழிப்பான கொள்கையை மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்க மாட்டோம் என்று வானியல் பேராசியர்கள் வாக்குறுதி கொடுக்க நேர்ந்தது. அந்தப் புத்தகம் படிக்கப்படவில்லை; எடுத்துக் கூறப்படவில்லை; அத எரிக்கவும் பட்டது. ஆனால் கோப்பர்னிக்கசின் கொள்கை சரியானதன்று என்று இன்று யார்தான் மறுக்க முடியும்?

ஒரு கருத்தோ கொள்கையோ தவறானால், இயற்கை முறைகளுக்கு முரண்பட்டதனால், அதற்கு எவ்வளவுதான் வலுவான காவலும் தடுத்து நிறுத்த முடியாது. எப்போதும் இயங்கிக் கொண்டிருக்கும் ஓர் எந்திரத்தை உருவாக்க எண்ணுவது மிகவும் கவர்ச்சியான ஆசை தான். இன்றும் கூட இந்த எண்ணத்தைக் கைவிடாதவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். சிலரோ அப்படிப்பட்ட எந்திரத்தைத் தாம் உண்மையிலேயே கண்டு பிடித்து விட்டதாகக் கூட நம்புகின்றனர். ஆனால் என்றென்றும் இயங்கிக் கொண்டிருக்கும் எந்திரங்களைப் பற்றிய திட்டங்களை, எந்த ஒரு நாட்டிலுள்ள எந்தவொரு வணிக நிலையமும் ஏறிட்டுப்பார்க்கக்கூடத் அணியமாய் இராது. அவற்றை உருவாக்க முடியாது; ஏனெனில் அவை இயற்கை நியதிகளுக்கு மாறானவை.

சமுதாயத்தையும் கூட, இயல்பு முறைகள் ஆண்டு வரக்கூடுமோ? ஒருவேளை எவரது விருப்பத்தையும் பொருட்படுத்தாமல் ஒரு பொருங்கடலுக்குள் "அதுவும் சென்று விடுகின்றதோ?"அவ்வாறு விழுவதுதான் அதன் வளர்சியின் நடைமுறைப் போக்கோ?

மூரிலிருந்து ஓவென் வரையிலும் கடந்த காலத்தின் அனைத்து கருத்தியல் உலகம் சமன்மையாளர்களும்